கோவை : சட்டவிரோதமாக பணம் கொண்டு செல்லப்படுவதாக மக்களுக்கு எழுந்த சந்தேகத்தை தெளிவுபடுத்தவே, சம்பந்தப்பட்ட கண்டெய்னர் லாரியில் சோதனை நடத்தப்பட்டதாக கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தெரிவித்தார்.
கோவை : சட்டவிரோதமாக பணம் கொண்டு செல்லப்படுவதாக மக்களுக்கு எழுந்த சந்தேகத்தை தெளிவுபடுத்தவே, சம்பந்தப்பட்ட கண்டெய்னர் லாரியில் சோதனை நடத்தப்பட்டதாக கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தெரிவித்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :- கோவை மாவட்டத்தில் நியாமான முறையில் தேர்தல் நடக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 9 கோடியே 6 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 153 கிலோ தங்கம் பிடிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு உக்கடம் பகுதியில் பணம் கொண்டு செல்வதாகத் தகவல் கிடைத்தது. வாகனம் சோதனையின் போது டீத்தூள் இருப்பது தெரியவந்தது. வருமான வரி, சுங்க வரித்துறை, ஜி.எஸ்.டி. வருமான வரித்துறை அதிகாரிகள் என அனைவர் முன்னிலையிலும் ஆய்வு செய்யப்பட்டது
கண்டெய்னர் லாரியில் தவறான நடவடிக்கைகள் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின்னர் லாரி விடுவிக்கப்படும். இரவு 11 மணிக்கு மக்கள் சந்தேகம் தெரிவித்ததால், வாகனம் ஆட்சியர் அலுவலகம் கொண்டு வரப்பட்டு சந்தேகம் முழுமையாகத் தெளிவுபடுத்தவே இந்த ஆய்வு நடத்தப்பட்டது. பொதுமக்கள், வணிகர்களின் உடைமைகளை ஆய்வு செய்யும் போது, மக்களை துன்புறுத்தக் கூடாது என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்பவர்கள் மீது தேர்தல் ஆணையம் பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுத்துள்ளது.