கோவை : பிரதமர் மோடி இன்று கோவை வர உள்ள் நிலையில், பீளமேடு அருகே உள்ள தனியார் விடுதியில் இரண்டு துப்பாக்கிகளுடன் தங்கி இருந்த முன்னாள் சி.ஆர்.பி.எஃப். வீரரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து போலீசார் விசாரணை செய்து விடுவித்தனர்.
கோவை : பிரதமர் மோடி இன்று கோவை வர உள்ள் நிலையில், பீளமேடு அருகே உள்ள தனியார் விடுதியில் இரண்டு துப்பாக்கிகளுடன் தங்கி இருந்த முன்னாள் சி.ஆர்.பி.எஃப். வீரரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து போலீசார் விசாரணை செய்து விடுவித்தனர்.
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவை வருவதையொட்டி, கோவை மாநகரம் முழுவதும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன், சிறப்பு பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், விமான நிலையத்தில் துவங்கி கொடிசியா, பீளமேடு உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களில் காவல்துறையினரின் கெடுபிடி அதிகரித்துள்ளது. தொடர்ச்சியாக, ஆங்காங்கே சோதனைகள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், பீளமேடு ஜி.கே.டி. நகரில் உள்ள ஆர்.வி.ஆர் லாட்ஜில் நேற்று இரவு நேரத்தில் நடந்த சோதனையின்போது, இரண்டு துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், துப்பாக்கி வைத்திருந்த நபரிடம் விசாரணை செய்ததில், அவர் பெயர் தரணிதரன் என்பதும், முன்னாள் சி.ஆர்.பி.எப்
வீரரான அவர், தற்போது தனியார் பாதுகாப்பு நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. மேலும், இவர் ஒரு பிஸ்டல் மற்றும் ஒரு ரிவால்வர் வைத்திருந்தார். அவரிடம் இருந்த 2 துப்பாக்கிகள் உரிமம் பெற்ற நிலையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை விசாரணை செய்த போலீசார் துப்பாக்கிகளை ஒப்படைத்து அனுப்பிவிட்டனர்.
பிரதமர் இன்று மாலை கோவை வரும் நிலையில், துப்பாக்கியுடன் நபர் ஒருவர் விடுதியில் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.