கட்டு கட்டாக பணம் இருப்பதாக வெளியான வதந்தியால் கண்டெய்னர் லாரியை சிறைபிடித்த கோவை மக்கள்

கோவை : கோவை அருகே தேர்தலுக்காக விநியோகம் செய்வதற்காக பணம் ஏற்றி வந்ததாக வெளியான வதந்தியால் கண்டெய்னர் லாரியை பொதுமக்கள் சிறைபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


கோவை : கோவை அருகே தேர்தலுக்காக விநியோகம் செய்வதற்காக பணம் ஏற்றி வந்ததாக வெளியான வதந்தியால் கண்டெய்னர் லாரியை பொதுமக்கள் சிறைபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



உக்கடம் ஆத்துப்பாலம் பகுதியில் நேற்றிரவு வேகமாகச் சென்ற கண்டெய்னர் லாரி ஒன்றை அப்பகுதி மக்கள் விரட்டி பிடித்தனர். லாரி ஓட்டுநர் பிரகாஷ் முன்னுக்குப்பின் முரணாக பேசிய நிலையில், கண்டெய்னர் லாரியில் கட்டுகட்டாக பணம் இருப்பதாக தகவல் பரவியதால் பொதுமக்கள் அங்கு குவிந்தனர். தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும், காவல்துறையினரும் வந்து விசாரணையில் ஈடுபட்டனர். இதில், கண்டெய்னர் லாரி தாராபுரத்தை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. லாரியில் டீத்தூள் இருப்பதாக ஓட்டுனர் கூறியும் நம்ப மறுத்த பொதுமக்கள், அதனை அங்கேயே திறந்து காட்டுமாறு வலியுறுத்தினர். போலீசார் கேட்டுக் கொண்டும் கூட்டம் கலைந்து செல்லாததால் லேசான தடியடி நடத்தி விரட்டியடித்தனர். பின்னர் அங்கு வந்த கோவை மாநகர காவல் துணை ஆணையர், பொதுமக்கள் கலைந்து செல்லுமாறும் தேர்தல் பறக்கும் படையினரின் சோதனைக்கு இடையூறு செய்ய வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்.



கண்டெய்னரின் பூட்டை உடைக்க முயன்றும் முடியாததால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்று திறந்து பார்த்தபோது, அதில் மூட்டைகளில் பேக்செய்யப்பட்ட டீத்தூள் இருந்தது. வெள்ளக்கிணறு பகுதியில் இருந்து ஏற்றுமதிக்காக அந்த லாரி கொச்சிக்கு அனுப்பப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. கண்டெய்னர் லாரியில் பணம் இருப்பதாக வதந்தி பரவியதால் கோவையில் 5 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...