திருப்பூர் : திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் இதுவரை ஒரு கோடியே 62 லட்சத்து 26 ஆயிரத்து 680 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி தெரிவித்தார்.
திருப்பூர் : திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் இதுவரை ஒரு கோடியே 62 லட்சத்து 26 ஆயிரத்து 680 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கே.எஸ். பழனிச்சாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்குள்ளான 6 சட்டமன்ற தொகுதிகளையும் சேர்த்து 15 லட்சத்து 29 ஆயிரத்து 836 பேர் வாக்காளர்களாக உள்ளனர். இந்தாண்டு வாக்காளர்களுக்கான பூத் சிலிப் மாற்றப்பட்டு புதுவடிவத்தில் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில், வாக்காளர்கள் வாக்காளர் அடையாள அட்டைக்கு பதிலாக கொண்டுசெல்லக்கூடிய ஆவணங்கள் எவை எவையென அச்சிடிக்கப்பட்டிருக்கிறது. ஊழியர்களுக்கான தபால் வாக்குகள் போல, காவல்துறையினருக்கு தபால் வாக்குகள் அளிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். நாடாளுமன்ற தேர்தல் விதிகள் அமல்படுத்தப்பட்டது முதல் மாவட்டத்தில் 1 கோடியே 62 லட்சத்து 26 ஆயிரத்து 680 ருபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, இவ்வாறு அவர் கூறினார்.