புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரியார் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் எதிரொலி : கோவையில் பெரியார் சிலைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

கோவை : புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரியார் சிலை உடைக்கப்பட்டதை தொடர்ந்து, கோவையில் உள்ள பெரியார் சிலைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


கோவை : புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரியார் சிலை உடைக்கப்பட்டதை தொடர்ந்து, கோவையில் உள்ள பெரியார் சிலைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரில் உள்ள பட்டுக்கோட்டை சாலையில் அரசு பொது மருத்துவமனை அருகே திராவிடர் கழகத்தின் சார்பில் 1998-ம் ஆண்டு பெரியார் சிலை நிறுவப்பட்டது. இந்தப் பெரியார் சிலையானது, இன்று தலைப்பகுதி உடைக்கப்பட்டு சாலையில் கிடந்தது. இதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், திராவிட கழகத்தினர் மற்றும் தி.மு.க.வினர் அந்தப் பகுதியில் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். 



இதைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பரபரப்பான சூழல் நிலவியது. அதேபோல, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பெரியார் சிலைகளுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தில் உள்ள புளியகுளம் காந்திபுரம், சுந்தராபுரம், குனியமுத்தூர், சூலூர் போன்ற பல்வேறு பகுதிகளில் உள்ள பெரியார் சிலைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதி அறிவிக்கப்பட்ட உடன் அனைத்து சிலைகளும் மற்றும் அரசியல் அடையாளங்கள் மூடப்பட்டது. இதில், மூடப்பட்ட பெரியார் சிலைகள் தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டது என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, மூடப்பட்ட சிலைகள் திறக்கப்பட்ட நிலையில், தற்போது உடைக்கப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...