கோவை : பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகளில் திருநாவுக்கரசை தவிர்த்து மற்ற 3 பேரின் காவலை 22-ம் தேதி வரை நீட்டித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை : பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகளில் திருநாவுக்கரசை தவிர்த்து மற்ற 3 பேரின் காவலை 22-ம் தேதி வரை நீட்டித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொள்ளாச்சி கல்லூரி மாணவி பாலியல் வழக்கில் கைது செய்து சிறையில் வசந்தகுமார், திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன் ஆகியோர் கடந்த பிப்ரவரி 26-ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். இதனையடுத்து, கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தில் அரசியல் தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வசந்தகுமார், சதீஷ், சபரிராஜன் ஆகிய 3 பேர் இன்று வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, மூவருக்கும் 22-ம் தேதி காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதேபோல, பொள்ளாச்சியில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக புகார் அளித்த பெண்ணின் சகோதரரை தாக்கிய வழக்கில் கைதாகியுள்ள மணிவண்ணன் என்பவரின் நீதிமன்ற காவலையும் வருகிற 22-ஆம் தேதி வரை நீட்டித்து கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.