கோவை : மேட்டுப்பாளையத்தில் உரிய ஆவணங்களின்றி வங்கி ஏ.டி.எம்.மில் நிரப்புவதற்காகக் கொண்டு செல்லப்பட்ட ஒரு கோடியே இரண்டு லட்ச ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
கோவை : மேட்டுப்பாளையத்தில் உரிய ஆவணங்களின்றி வங்கி ஏ.டி.எம்.மில் நிரப்புவதற்காகக் கொண்டு செல்லப்பட்ட ஒரு கோடியே இரண்டு லட்ச ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

மேட்டுப்பாளையத்தில் உள்ள தேக்கம்பட்டி என்னுமிடத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தனியார் செக்யூரிட்டி வேன் ஒன்று வந்த போது, அதனை தடுத்து அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அதில், வாகனத்தில் சுமார் ஒரு கோடியே 2 லட்சத்து 26 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இப்பணத்திற்கான ஆவணங்கள் குறித்து வாகனத்தில் இருந்த நான்கு பேரிடம் விசாரித்த போது, இது வங்கி ஏ.டி.எம்.மில் செலுத்தக் கொண்டு செல்லப்படும் தொகை என்றும், வேறு ஆவணங்கள் ஏதுமில்லை என தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள், பணம் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் பறிமுதல் செய்து மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அவ்வகத்திற்குக் கொண்டு சென்றனர். இதன் பின்னர் விசாரணை செய்யப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட பணம் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.