கோவை : கோவை மாநகராட்சி அலுவலகத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு ராட்சத பலூன் பறக்கவிடப்பட்டது.
கோவை : கோவை மாநகராட்சி அலுவலகத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு ராட்சத பலூன் பறக்கவிடப்பட்டது.

வரும் 18-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநகராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி மற்றும் மாநகராட்சி ஆணையர் ஸ்ரவன் குமார் ஜடாவத் ஆகியோர் இணைந்து பறக்கவிட்டனர். இந்த நிகழ்வின் போது, உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி துணை ஆணையருமான பிரசன்ன ராமசாமி, உதவி ஆட்சியர் (பயிற்சி) ஸ்னேகா ஆகியோர் இருந்தனர்.
இதேபோல, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு ராட்சத பலூன் பறக்கவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.