கோவை : பொள்ளாச்சி - தாராபுரம் சாலையில் கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்ட நபரை 15 நாள் காவலில் வைக்க பொள்ளாச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை : பொள்ளாச்சி - தாராபுரம் சாலையில் கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்ட நபரை 15 நாள் காவலில் வைக்க பொள்ளாச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 6-ம் தேதி கோவை ராமகிருஷ்ணா கல்லூரியைச் சேர்ந்த மாணவி, மர்மமான முறையில் பொள்ளாச்சி - தாராபுரம் சாலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இது தொடர்பாக, மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யாவின் உத்தரவுபடியும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையிலும், கொலையாளிகளை பிடிக்க ஏ.டி.எஸ்.பி மாடசாமி மற்றும் டி.எஸ்.பி.க்கள் சிவகுமார், பாலமுருகன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
இதனிடையே, மாணவியின் உறவுக்காரரான சதீஷ்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், 'ஏற்கனவே எனக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், தன்னுடன்தான் வாழுவேன் என அழுத்தம் கொடுத்ததால், திட்டமிட்டு கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து, தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், கோவை கல்லூரி மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சதீஷ்குமார், பொள்ளாச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, சதீஷ் குமாரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி ரேவதி உத்தரவிட்டார். இதையடுத்து, போலீசார் கைது செய்யப்பட்ட குற்றவாளியை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.