கோவை : ஏ.டி.எம்.மில் பணம் நிரப்புவதற்காக உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ரொக்கம் மற்றும் உரிமம் இல்லாத துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாகனங்களில் கொண்டு செல்லும் பொருட்களைப் பறக்கும் படையினர் தீவிர சோதனைக்கு உட்படுத்துகின்றனர். இதுவரை கோவையில் ரூ. 8 கோடி பறிமுதல் செய்யப்பட்டு, அதில் ரூ. 2.50 கோடி வரை உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டவர்களிடம் திருப்பி கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், இன்று சங்கனூர் சாலையில் அதிகாரி ராஜேஸ்வரி தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சிங்காநல்லூர் வரதராஜபுரம் பகுதியில் உள்ள சேப் கார்டு ரைட்டர் என்ற தனியார் நிறுவனம் சார்பில் ஏ.டி.எம்.மில் பணம் நிரப்புவதற்காக எடுத்துச் செல்லப்பட்ட பணத்தை, உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்தனர். அதோடு, வாகனத்தில் வந்த காவலாளி சச்சின்குமாரிடம் இருந்து உரிமம் இல்லாத ரைபிள் மற்றும் ஐந்து தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவையில் உரிமம் இல்லாத துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறக்கும் படையினரால் பறிமுதல்.