கருணாநிதியை வீட்டுக் காவலில் வைத்து கட்சி தலைவர் பதவியைப் பிடித்தது குறித்து விசாரணை நடத்தப்படும் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

நீலகிரி : கருணாநிதியை வீட்டுக் காவலில் வைத்து கட்சி தலைவர் பதவியை ஸ்டாலின் பிடித்தது குறித்து விசாரணை நடத்தப்படும் என நீலகிரியில் பிரச்சாரம் செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


நீலகிரி : கருணாநிதியை வீட்டுக் காவலில் வைத்து கட்சி தலைவர் பதவியை ஸ்டாலின் பிடித்தது குறித்து விசாரணை நடத்தப்படும் என நீலகிரியில் பிரச்சாரம் செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

நீலகிரி மாவட்டம் குன்னூர் உதகையில் இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நீலகிரி அ.தி.மு.க. நாடாளுமன்ற வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது :- நீலகிரி மாவட்டம் அம்மாவின் சொந்த மாவட்டம். அம்மா இருக்கும் போது நீலகிரிக்கு என்ன திட்டங்கள் செய்தாரோ. அதேபோல தொடர்ந்து திட்டங்கள் செயல்படுத்தப்படும். மேலும், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கட்டப்பஞ்சாயத்து தலைவராக செயல்படுகிறார். கண்ணுக்கு தெரியாத காற்றிலேயே காசு பார்க்கக் கூடிய வேட்பாளர் ஆ. ராசா. 



நீலகிரி தி.மு.க. வேட்பாளர் ஆ. ராசா ஊழல் செய்து சிறை சென்றவர். மீண்டும் சொல்கிறேன் நீலகிரி மாவட்டம் அம்மாவின் சொந்த மாவட்டம். இந்த மாவட்டத்தை எனது மாவட்டமாக கருதுகிறேன். தமிழகம் பொருளாதாரத்தில் முன்னேற என்ன என்ன திட்டம் உள்ளதோ, அனைத்தும் நிறைவேற்றப்படும். டேண்டீ தொழிலாளர்களுக்கு சம்பளம் உயர்த்தி தரப்படும். கோடநாடு கொலை வழக்கில் ஸ்டாலின் என்னை சம்பந்தப்படுத்திப் பேசுகிறார். அது அன்ட புழகு, ஆகாச புழகு, பச்சை பொய். மீண்டும் சிறைக்கு செல்லவுள்ள ராசாவுக்கு ஏன் ஓட்டு போடுகிறீர்கள். மேலும், நாடு பாதுகாப்பாக இருக்க மோடி மீண்டும் பிரதமராக வேண்டும். செக்சன் 17 நிலப்பிரச்சினையில் பட்டா கிடைக்க வழிவகை செய்யப்படும். 



கருணாநிதி இருந்த வரை ஸ்டாலினை கட்சி தலைவராக ஏற்கவில்லை. இரண்டு ஆண்டுகளாக கருணாநிதியை வீட்டுக் காவலில் வைத்து கட்சி தலைவர் பதவியைப் பிடித்தது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும். தண்ணீர் பிரச்சினை மார்க்கெட் கடை வாடகை பிரச்சினை குறித்து நல்ல முடிவு எடுக்கப்படும், என்றார்.



Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...