கோவை : இன்னும் சில நாட்களில் திருமணம் நடைபெற உள்ள நிலையில், இளம்பெண் பொள்ளாச்சி - தாராபுரம் சாலையில் நேற்று கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
கோவை : இன்னும் சில நாட்களில் திருமணம் நடைபெற உள்ள நிலையில், இளம்பெண் பொள்ளாச்சி - தாராபுரம் சாலையில் நேற்று கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க இளம் கல்லூரி மாணவி கோவை ராமகிருஷ்ணா கல்லூரியில் பயின்று வருகிறார். நேற்று முதல் காணவில்லை என அவரது பெற்றோர், கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதனிடையே, பொள்ளாச்சி - தாராபுரம் சாலையில் இளம்பெண் ஒருவர் அரை நிர்வாணத்துடன் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் நடத்திய விசாரணையில், காணாமல் போன கல்லூரி மாணவிதான் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. அதேபோல, மாணவியை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு இருப்பார் என்ற கோணத்தில் போலீசார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, பொள்ளாச்சி அருகே இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யாவின் உத்தரவுபடியும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையிலும், கொலையாளிகளை பிடிக்க ஏ.டி.எஸ்.பி மாடசாமி மற்றும் டி.எஸ்.பி.க்கள் சிவகுமார், பாலமுருகன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், பலியான இளம்பெண்ணுக்கு நிச்சயதார்த்தம் முடிந்து திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தற்போது கொலை செய்யப்பட்ட சம்பவம் போலீசாருக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.