புகார் கொடுத்த போதே நடவடிக்கை எடுத்திருந்தால் மகள் உயிரிழந்து இருக்க மாட்டார் : உறவினர்கள் ஆதங்கம்

கோவை : புகார் கொடுத்த போதே காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து இருந்து இருந்தால், மகள் பிணமாக கண்டெடுத்து இருக்க மாட்டார்கள் என உயிரிழந்த கல்லூரி மாணவியின் உறவினர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.


கோவை : புகார் கொடுத்த போதே காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து இருந்து இருந்தால், மகள் பிணமாக கண்டெடுத்து இருக்க மாட்டார்கள் என உயிரிழந்த கல்லூரி மாணவியின் உறவினர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.



ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க இளம் கல்லூரி மாணவி கோவை ராமகிருஷ்ணா கல்லூரியில் பயின்று வருகிறார். நேற்று முதல் காணவில்லை என அவரது பெற்றோர், கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதனிடையே, பொள்ளாச்சி - தாராபுரம் சாலையில் இளம்பெண் ஒருவர் அரை நிர்வாணத்துடன் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 



இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் நடத்திய விசாரணையில், காணாமல் போன கல்லூரி மாணவிதான் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. அதேபோல, மாணவியை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு இருப்பார் என்ற கோணத்தில் போலீசார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, பொள்ளாச்சி அருகே இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் உத்தரவின்பேரில், 4 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். அதேபோல, மாணவி கல்லூரியில் இருந்து காரில் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் அந்தப் பகுதியில் இருக்கும் சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், புகார் கொடுத்த போதே காவல்துறையினர் உடனடியாக செல்போன் எண்ணை வைத்து தேடி இருந்தால், காணாமல் போன தனது மகளை இன்று பிணமாக கண்டெடுத்து இருக்க மாட்டார்கள் என உறவினர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...