கோவை : தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையிலும், கோவை மாவட்டத்தில் உள்ள இரண்டு பழங்குடி கிராமங்களில் தார் இருந்ததற்கான அடையாளம் கூட தெரியாத அளவிற்கு கிடக்கும் மோசமான சாலைகளை சீரமைக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை : தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையிலும், கோவை மாவட்டத்தில் உள்ள இரண்டு பழங்குடி கிராமங்களில் தார் இருந்ததற்கான அடையாளம் கூட தெரியாத அளவிற்கு கிடக்கும் மோசமான சாலைகளை சீரமைக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் சின்ன ஜம்புஹண்டி மற்றும் கூட்டுபுலிக்காடு ஆகிய மலைக்கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த கிராமங்களில் வசிக்கும் 100 பழங்குடியின குடும்ப மக்கள், கோவை நகருக்கு வருவதற்காக 2 சாலைகளை மட்டுமே நம்பியுள்ளனர். அதாவது, சின்ன ஜம்புஹண்டி வழியாக கூட்டுப்புலிக்காடு செல்லும் சாலையிலும், நேரடியாக ஆலமரமேடு பகுதிக்கு செல்லும் சாலையிலும் பயணம் செய்வது அவர்களுக்கு கடும் சவாலானதாகும். மேலும், இந்த சாலை தமிழக அரசின் தோட்டக்கலை பண்ணைக்கு செல்லும் வழியையும் இணைக்கிறது.

"எங்களுக்கு இந்த ஒரு சாலைதான் உள்ள சூழலில், அதுவும் மோசமான நிலையில் இருக்கிறது. எனவே, அதனை நாங்கள் பயன்படுத்துவதைக் குறைத்து விட்டோம்," என்கிறார் சின்ன ஜம்புஹண்டியில் வசித்து வரும் ஆட்டோ ஓட்டுநர்.
மேலும், பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டுள்ள இந்த சாலை குண்டும் குழியுமாக இருப்பதால், சாலையில் செல்பவர்கள் கீழே விழும் நிலை ஏற்பட்டுள்ளது. புதிய சாலைகள் அமைக்காதவரை பள்ளி செல்லும் மாணவர்களுக்கு சிரமமாக இருக்கும் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
"அந்த கிராமங்களில் வசிப்பவர்களிடம் வாகனங்கள் கிடையாது. சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு மோசமான சாலையில் நடந்து சென்றால்தான் மெயின் ரோட்டை அடைய முடியும். அதேவேளையில், அந்த இரு கிராம மக்களுக்கான வாக்குச்சாவடி மெயின் ரோட்டிற்கு அருகாமையில் உள்ள ஜம்புஹண்டி கிராமப் பகுதியில் இருக்கிறது. இந்த நிலை நீடித்தால், தேர்தல் தினம் அன்று பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்," என்றார் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர்.
இது குறித்து மாவட்ட கிராமப்புற மேம்பாட்டு திட்டத்துறை இயக்குநர் ரூபன் சங்கர் ராஜிடம் கேட்டபோது, "மோசமான சாலை விரைவில் சீரமைக்கப்படும்," என்றார்.
என்னதான், தேர்தல் வந்தால் வீதிகளில் உள்ள சாலைகளில் தார் ஊற்ற அரசியல்வாதிகள் தொடங்கி விடுவார்கள் என சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் தெறிக்கவிடப்பட்டு வந்தாலும், இந்த மலைகிராமங்கள் கண்டுகொள்ளப்படாமல் இருப்பது சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.