கோவை : கோவை நாடாளுமன்ற பா.ஜ.க., வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் அண்மை பேட்டி, தங்களை வேதனையடையச் செய்துவிட்டதாக தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
கோவை : கோவை நாடாளுமன்ற பா.ஜ.க., வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் அண்மை பேட்டி, தங்களை வேதனையடையச் செய்துவிட்டதாக தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கோவை நாடாளுமன்ற பா.ஜ.க., வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று வெளியாகிய நாளிதழுக்கு அளித்த பேட்டியில், "சிறு,குறு தொழில்கள் பாதிக்கக் காரணம், பில் இல்லாமல் சட்டத்திற்கு புறம்பாக தொழில் செய்பவர்கள் தான் ஜி.எஸ்.டி.யால் பாதிக்கப்படுகிறார்," எனக் கூறியிருந்தார். அவரது இந்தப் பதில்கள் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
50 ஆயிரம் தொழில்கள் மற்றும் 5 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கடந்த தமிழக சட்டசபைக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். மேலும், பொதுத்துறை மற்றும் தனியார் துறை சார்ந்தவர்களுக்கு ஜாப் ஆர்டர்களாகவே, உதிரி பாகங்களாகவோ செய்து கொடுத்து, அதற்கான பில் தொகையைப் பெறுவதற்கு 3 மாதம் முதல் 6 மாதம் வரை ஆகும். இந்த நிலையில், ஜி.எஸ்.டி. பிரதி மாதம் 20-ம் தேதிக்குள் செலுத்த தவறும் பட்சத்தில், நாள் ஒன்றுக்கு ரூ. 50 வீதம் அபராத வட்டியாக மட்டும் தொழில்முனைவோர்கள் செலுத்துகின்றனர்.
ஜி.எஸ்.டி. அமலாக்கத்திற்கு பிறகு சுமார் ஒரு லட்சத்திற்கும மேல் அபராதத் தொகையாக ஆயிரக்கணக்கான தொழில்முனைவோர்கள் செலுத்தியுள்ளனர். இது திரு. ராதாகிருஷ்ணனுக்கு பாதிப்பாக தெரியவில்லை..?.
மேலும், ஜாப் ஆர்டர்களுக்கு இந்தியாவில் வரிவிதிப்பு கொள்கை அமல்படுத்தியதில் இருந்து ஜி.எஸ்.டி. வரும் வரைக்கும் எந்தவிதமான வரி விதிப்பிற்குள்ளும் ஜாப் ஆர்டர்கள் செய்கின்றவர்களை எந்த அரசும் கொண்டு வந்ததில்லை. ஆனால், ஜி.எஸ்.டி. அமல்படுத்தியதில் ஜாப் ஆர்டர்களுக்கும் 18 சதவீதம் விதித்து சாதாரண குறுந்தொழில் முனைவோர்களை ஆயிரக்கணக்கில் அவர்களுடைய அடையாளங்களை இழக்கச் செய்து உள்ளது திரு. ராதாகிருஷ்ணனுக்கு தெரியவில்லை..?. எங்கள் பாதிப்பு குறித்து மத்திய அமைச்சர் பெரும் மக்களிடமும், அதிகாரிகளிடமும் தொடர்ந்து சொல்லி வந்தது அவருக்கு தெரியவில்லை..?.
மிகப்பெரும் பாதிப்பில் உள்ள சிறு,குறு தொழில்முனைவோர்களை சட்டத்திற்குபுறம்பாக செய்பவர்கள்தான் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளார்கள் என்ற சி.பி. ராதாகிருஷ்ணனின் பேட்டி மிகுந்த வேதனையை அளிக்கிறது, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.