கேரளா : கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தை சேர்ந்த ஆதிவாசி தன்யாஸ்ரீ என்பவர் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று, வயநாடு பகுதியின் முதல் பெண் ஆதிவாசி ஆட்சியராக பொறுப்பேற்க இருக்கிறார்.
கேரளா : கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தை சேர்ந்த ஆதிவாசி தன்யாஸ்ரீ என்பவர் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று, வயநாடு பகுதியின் முதல் பெண் ஆதிவாசி ஆட்சியராக பொறுப்பேற்க இருக்கிறார்.
நீலகிரி மாவட்டம் கூடலூரை ஒட்டியுள்ளது கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம். இங்குள்ள தொளுவன்னா பகுதியை சேர்ந்த ஆதிவாசி பெண் தனியாஸ்ரீ. மின்சாரம் வசதி இல்லாத வீட்டில் வசித்து வரும் அவருக்கு, ஆட்சியராக வேண்டுமென்பது ஆசை. அதற்கான முயற்சியை தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். சிவில் சர்வீஸ் தேர்வு எழுத டெல்லி செல்ல வசதி இல்லாத நிலையில், அவரது பெற்றோர்கள் உறவினர்களிடம் கடன் வாங்கி, தன்யாஸ்ரீயை டெல்லி அனுப்பி வைத்தனர். அங்கு தேர்வு எழுதிய தன்யாஸ்ரீ, தேர்வு எழுதிய பின்னர் கூலி வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில், வெளியான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளில், தன்யாஸ்ரீ 410 ரேங்க் எடுத்து வெற்றி பெற்றுள்ளார். வயநாடு பகுதியில் ஆதிவாசி பெண் ஆட்சியராவது இதுவே முதல்முறையாகும்.