கோவை : மக்களவை தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்டுள்ள கூட்டணி கட்சியின் வேட்பாளரான பா.ஜ.க.வின் சி.பி. ராதாகிருஷ்ணனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை பிரச்சாரம் செய்கிறார்.
கோவை : மக்களவை தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்டுள்ள கூட்டணி கட்சியின் வேட்பாளரான பா.ஜ.க.வின் சி.பி. ராதாகிருஷ்ணனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை பிரச்சாரம் செய்கிறார்.
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி, அரசியல் கட்சியின் முக்கிய தலைவர் கோவை தொகுதியில் முகாமிட்டு, அவரவர் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்த நிலையில், அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க.வின் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை பிரச்சாரம் செய்கிறார்.
திண்டுக்கல்லில் நாளை பிரச்சாரத்தை தொடங்கும் அவர், ஒட்டன்சத்திரம், தாராபுரம், உடுமலைபேட்டை, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிக்கிறார். இதைத் தொடர்ந்து, மாலை கோவையில் பிரச்சாரம் செய்கிறார். கோவையில், குறிச்சி, சுந்தராபுரம், தொண்டாமுத்தூர் ஆகிய பகுதிகளில் பொள்ளாச்சி தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளர் சி. மகேந்திரனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார். பின்னர், உக்கடம் பகுதியில் கோவை தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்கிறார்.
இதைத் தொடர்ந்து, திங்கட்கிழமை நீலகிரி அ.தி.மு.க. வேட்பாளர் எம். தியாகராஜன் மற்றும் திருப்பூர் எம்.எஸ்.எம். ஆனந்தன் ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார்.