சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்க மருத்துவமனையும், காவல்துறையும் தாமதப்படுத்துவதாக பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை : கோவையில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்க மருத்துவமனையும், காவல்துறையும் தாமதப்படுத்துவதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.


கோவை : கோவையில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்க மருத்துவமனையும், காவல்துறையும் தாமதப்படுத்துவதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் துடியலூர் சிறுமியின் குடும்பத்தினருக்கு, நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பணியில் இருந்து விலகிய ஆசிரியை சபரிமாலா ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார். மேலும், சிறுமியின் தங்கைக்கு சபரிமாலாவின் மகன் ஜெயசோழன் பொம்மை வழங்கி ஆறுதல் தெரிவித்தார். 

முன்னதாக, ஆசிரியை சபரிமாலா செய்தியாளர்களிடம் பேசியதாவது :- சிறுமிகள் மீதான பாலியல் வன்முறையை தடுக்க சட்டங்களை கடுமையாக்கினால் மட்டும் போதாது. பள்ளிகளில் 10 வயது முதலில் இருந்தே பிள்ளைகளுக்கு பாலியல் கல்வி கட்டாயமாக கற்பிக்கப்பட வேண்டும். ஆண் குழந்தைகளின் பெற்றோர்கள், இதுபோன்ற விவகாரத்தின் போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலாக இருக்க வேண்டும். பலரிடம் பெற்ற உதவிகளின் அடிப்படையில் சிறுமியின் குடும்பத்தினருக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வீடு, சிறுமியின் தங்கைக்கு உரிய கல்வி உள்ளிட்டவற்றை வழங்க தொடர் நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவித்தார்.



தொடர்ந்து, சிறுமியின் தாய் பேசுகையில், “மகளின் இறப்பிற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்காமல் காவல்துறையும், மருத்துவமனை நிர்வாகமும் அலைகழிக்கின்றனர். சில பத்திரிகைகளில் குழந்தை தொடர்பாக தவறான மோசமான தகவல்கள் பரப்பப்பட்டு வருவது தங்களுக்கு வேதனை அளிக்கிறது, என வருத்தம் தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...