கோவை : ஆனைகட்டி அருகே படுகாயங்களுடன் கிடந்த மானை மீட்ட ஆட்டோ ஓட்டுநர் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.
கோவை : ஆனைகட்டி அருகே படுகாயங்களுடன் கிடந்த மானை மீட்ட ஆட்டோ ஓட்டுநர் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

சின்னஜம்புஹண்டி குடியிருப்பு பகுதியில் பெண் மான் ஒன்று படுகாயங்களுடன் கிடந்தது. இதை கண்ட அந்த வழியாகச் சென்ற ஆட்டோ ஓட்டுநர் வெள்ளிங்கிரி, அதன் கழுத்து மற்றும் தொடை பகுதியில் காயம் இருப்பதை கண்டார். பின்னர், உடனடியாக ஆனைகட்டி கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு, சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், பெரியநாயக்கன் பாளையம் வனப்பகுதிக்குட்பட்ட கோபனரி வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.
“மான் ஒன்று பலத்த காயங்களுடன் தரையில் படுத்துக் கொண்டிருந்தது. தெரு நாய்கள் தாக்கியதால், காயமடைந்த மானுக்கு உடனடியாக சிகிச்சை தேவைப்பட்டது,” என்றார் வெள்ளிங்கிரி.