மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் 12 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தல்

கோவை : மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் 12 அம்ச கோரிக்கையை குடிமக்கள் செயல்பாட்டு குழு, வளரிளம் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு கூட்டமைப்பு முன்வைத்துள்ளது.


கோவை : மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் 12 அம்ச கோரிக்கையை குடிமக்கள் செயல்பாட்டு  குழு, வளரிளம் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு கூட்டமைப்பு முன்வைத்துள்ளது.

குடிமக்கள் செயல்பாட்டு குழு, வளரினம் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு கூட்டமைப்பினரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. அப்போது, விவசாயத்திற்கு அடுத்த படியாக, மக்களுக்கு பெருமளவு வேலை வாய்ப்பினை வழங்கும் பஞ்சாலை தொழில் ஒப்பந்த முறையில் கொத்தடிமைகளாக வளரிளம் பெண்கள் பணியமர்த்தப்பட்டு உடல் ரீதியாகவும், பாலியல் ரீதியாக பாதிக்கப்படும் பெண்களுக்கான தேர்தல் கோரிக்கைகள் வெளியிடப்பட்டது. இதில், கல்வி,வேலைவாய்ப்பு, குறைந்த பட்ச ஊதியம், அடையாள அட்டை மற்றும் பணி நிரந்தரம், குழந்தைகள் தொடர்பான சட்டங்களை நடைமுறைபடுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் அக்கூட்டமைப்பினர் கூறியதாவது :- தமிழகத்தில் 3,000 பஞ்சாலைகள் உள்ளது. மேற்கு மண்டலத்தில் 1,600-க்கும்  மேற்பட்ட ஆலைகள் உள்ளன. இங்கு மூன்று லட்சம் பெண்கள் பணிபுரிகின்றனர். அதில், இரண்டு லட்சம் பேர் இளம் பெண்கள் தொழிலாளர்கள் உள்ளனர். பணியில் அமர்த்தப்படுவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் 421 ரூபாய் வழங்கப்பட்டு, பயிற்சி முடித்த பின்னர் நிரந்தரம் செய்து ரூ. 18,000 வழங்கிட வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. ஆனால், இதுவரை இது நடைமுறைப்படுத்தப் படவில்லை. குழந்தை தொழிலாளர்களின் வயது வரம்பை 18 ஆக பதிக்கப்பட வேண்டும். இதற்கு உரிய கமிட்டிகள் அமைத்து நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும், பஞ்சாலை தொழிற்சாலைகளில் உள்ள விடுதிகள் பதிவு செய்யப்பட்டு உள்ளனவா..? எனவும், அப்படி பதிவு செய்யப்படாதவைகள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். 450 நாட்கள் வேலை பார்த்து இருப்பின், பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும்.

10 பெண்களுக்கு மேல் பணிபுரியும் இடத்தில் ஐ.சி.சி. கமிட்டியை நடைமுறைப்படுத்த வேண்டும். இவை அனைத்தும் சட்டத்தில் இருப்பினும், இதனை மதிப்பதே இல்லை. போராடி பெற்ற உரிமைகளை நசுக்க முயலுகின்றனர். இவை அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும். கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் அளிக்கப்பட உள்ளோம், என்றனர்.

இந்த சந்திப்பின் போது, ஹெச்.எம்.எஸ்.மாநில பொது செயலாளர் ராஜாமணி, எம்.எல்.எப். மாநில பொது செயலாளர் பழனிசாமி, ஐ.என்.டி.யு.சி மாநில செயலாளர் பாலசுந்தரம், சி.ஐ.டி.யு. திருப்பூர் மாவட்ட பஞ்சாலை சங்க செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, சமூக கல்வி மற்றும் முன்னேற்ற மைய செயல் இயக்குனர் நம்பி, மனித உரிமை அமைப்பு வழக்கறிஞர் சகாதேவன், சமூக ஆய்வாளர் நாராயணசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...