நகை கடைகளுக்கு சொந்தமான வாகனங்களை சோதனை செய்ய எதிர்ப்பு : கோவையில் 600-க்கும் மேற்பட்ட நகை கடைகள் வேலைநிறுத்தம்

கோவை : கோவையில் தங்க நகை கடைகளுக்கு எடுத்து செல்லப்பட்ட 149 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 600-க்கும் மேற்பட்ட நகை கடைகள் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 கோவை : கோவையில் தங்க நகை கடைகளுக்கு எடுத்து செல்லப்பட்ட 149 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 600-க்கும் மேற்பட்ட நகை கடைகள் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிரிங்க்ஸ் எனும் நிறுவனத்திற்கு நாடு முழுவதும் பல்வேறு கிளைகள் இயங்கி வருகின்றன. தங்க பெட்டகம் போன்று செயல்பட்டு வரும் அந்த நிறுவனத்தில், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தங்க நகை உற்பத்தியாளர்கள் தங்களுக்கு சொந்தமான தங்க கட்டிகளை சேகரித்து வைத்து வருகின்றனர். 



இந்நிலையில், கோவை சவுரிபாளையம் பகுதியில் உள்ள அந்நிறுவனத்தின் கிளையிலிருந்து டவுன்ஹால் பகுதியில் உள்ள ஏழு வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்காக, சுமார் 149 கிலோ எடையிலான தங்க கட்டிகளுடன் அந்நிறுவனத்தின் டெம்போ வேன் ஒன்று டவுன்ஹால் நோக்கி சென்று கொண்டிருந்தது. புலியகுளம் பகுதியில் அந்த வாகனத்தை நிறுத்திய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தபோது, வாகனத்தின் உள்ளே தங்க கட்டிகள் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து, அதற்கான உரிய ஆவணங்களை வாகனத்தில் வந்தவர்கள் சமர்ப்பிக்காததையடுத்து, தங்க கட்டிகளுடன் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.



இந்த நிலையில், தங்ககட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் நகை கடை உரிமையாளர்கள் ஒருநாள் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராஜவீதி, டவுன்ஹால் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் 600-க்கும் மேற்பட்ட நகை கடைகள் இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. உரிய ஆவணங்கள் இருந்தும் அதிகாரிகள் நகைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருவதாகவும், முறையாக வரி செலுத்திய பின்னரே தங்ககட்டிகளை எடுத்து வந்ததாகவும் தங்க நகை உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர். 



அதிகாரிகளின் இந்த போக்கை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், மாவட்ட தேர்தல் அதிகாரி தங்களது கோரிக்கையை ஏற்கவில்லை எனில், காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுமெனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர். இதன் காரணமாக, நாள் ஒன்றுக்கு 5 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுமெனவும் தங்கநகை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...