கோவை : கோவை மாவட்டம் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மகேந்திரன் ஆதரித்து அமைச்சர் எஸ்பி வேலுமணி அவருடைய சொந்த தொகுதியான தொண்டாமுத்தூரில் வாக்குகள் சேகரித்தார்.
கோவை : கோவை மாவட்டம் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மகேந்திரன் ஆதரித்து அமைச்சர் எஸ்பி வேலுமணி அவருடைய சொந்த தொகுதியான தொண்டாமுத்தூரில் வாக்குகள் சேகரித்தார்.
அப்போது எதிர்கட்சி தலைவர் முக ஸ்டாலின் பிரச்சாரம் செய்த போது, அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது கடும் குற்றச்சாட்டுகள் வைத்து பேசியதை குறிப்பிட்டு, அதற்கு பதிலடி தரும் விதத்தில் பிரச்சாரம் செய்தார். தொடர்ந்து தொண்டாமுத்தூர் மக்கள் மத்தியில் பேசிய அமைச்சர், நான் கேடி என்றல்லாம் சொன்னார், ஆமாம் நான் கேடி தான் அதிமுக ஆட்சியை காப்பற்றியவன், ஒபி.எஸ் - ஈபிஎஸ் இணைத்ததில் நான் கேடி, வெற்றி கூட்டணி அமைத்ததில் நான் கேடி இதல்லாம் பிடிக்காமல் என்மீது கோபம் கொண்டு பேசி வருகிறார்.
திமுகவில் பாடுபட்டவர்கள் நிறையபேர் உள்ளார்கள், ஆனால் கருணாநிதி மறைவுக்கு பின்பு தலைவர் பதவிக்கு வந்தவர். வெற்றி கூட்டணி அமைப்பதற்க்கு நான் கேடி. ஸ்டாலினின் முதலமைச்சர் கனவை தகர்தறிந்தது நான், முதலமைச்சருக்கு ஆதரவாக நான் இருக்கிறேன். இன்றைகே பதவியை ராஜினாமா செய்கிறேன். திமுக தலைவர், எதிர்கட்சி தலைவர் பதவியில் இருந்து விலக தயாரா??நான் அரசியலில் இருந்து விலக தயார். தவறான, ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டுகள் வைத்து வருகிறார், எஸ்.பி வேலுமணி. முக ஸ்டாலின் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன். எனக்கு பயமில்லை.. ஜெயலலிதா என்னை சிங்கம்போல் உருவாக்கியுள்ளார்.