கோவை : கோவை போத்தனூர் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் பள்ளி மாணவர்கள் உட்பட நான்கு பேர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை : கோவை போத்தனூர் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் பள்ளி மாணவர்கள் உட்பட நான்கு பேர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை சுந்தராபுரத்தையடுத்த பிள்ளையார்புரம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியின் 9 வயது மகள் பள்ளி விடுமுறை காரணமாக வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த முதியவர் செல்வராஜ் (60) மற்றும் பள்ளி மாணவர்கள் மூன்று பேர் சேர்ந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரியவந்துள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர் சிறுமியின் தாய் கொடுத்த புகார் அடிப்படையில் இராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலிசார் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மூன்று பள்ளி மாணவர்களை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

முதியவர் செல்வராஜை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 9 வயது சிறுமியை பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து முதியவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கோவை மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.