வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை என நிரூபித்தால் மக்கள் நீதி மய்யம் பிரதிநிதிகள் ராஜினாமா செய்வார்கள் : எதிர்கட்சியினர் செய்வார்களா..? கமல் கேள்வி

திருப்பூர் : மக்கள் நீதி மய்யம் முன்வைத்த வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை என நிரூபித்தால் மக்கள் நீதி மய்யம் பிரதிநிதிகளை ராஜினாமா செய்வார்கள் எனக் கூறிய கமல், மற்ற கட்சிகள் இதனை சொல்வார்களா..? என்று திருப்பூர் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கேள்வி எழுப்பினார்.


திருப்பூர் : மக்கள் நீதி மய்யம் முன்வைத்த வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை என நிரூபித்தால் மக்கள் நீதி மய்யம் பிரதிநிதிகளை ராஜினாமா செய்வார்கள் எனக் கூறிய கமல், மற்ற கட்சிகள் இதனை சொல்வார்களா..? என்று திருப்பூர் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கேள்வி எழுப்பினார்.



மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகின்ற வேட்பாளர் சந்திரகுமாரை ஆதரித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசிதாவது :- பிரதமர் தேர்தல்தானே என்று ஒதுங்கி நிற்க முடியாது. மத்தியில் இழுபறி நிலை வரும்போது, இன்று மோடியை வேண்டாம் என்பவர்கள் எல்லாம் அவரிடம் சென்று நிற்பார்கள். அப்போது, தமிழகத்தின் குரலாய் ஒழிக்க மக்கள் நீதி மய்யம் அங்கு இருக்க வேண்டும். படித்தவர்கள் நோட்டாவிற்கு வாக்களித்தால், துரைமுருகன் நோட்டோடு சென்றால், யார் நாட்டை காப்பது. நாங்கள் சொன்ன வாக்குறுதிகளை குறித்த காலத்தில் நிறைவேற்றுவோம். அவ்வாறு இல்லையெனில் கேள்வி கேளுங்கள் அல்லது எங்கள் பிரதிநிதிகள் கொடுத்த வாக்குறுதி உட்பட எந்த பணியினையும் செய்யவில்லை என்பதை நிரூபித்தால், அவரை ராஜினாமா செய்ய வைப்பது என் கடமை. இதை மற்றகட்சிகள் செய்வார்களா..?. அவ்வாறு செய்தால் அவர்கள் கட்சிகளையே கலைக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும், என பேசினார். 



முன்னதாக, இந்தக் கூட்டத்தை காண இளைஞர்கள் சிலர் மரங்களில் ஏறி டார்ச் லைட் அடித்தவாறே, கமல்ஹாசன் உரையை கேட்டுக்கொண்டிருந்தனர். மேலும், மேடையில் மக்கள் நீதி மய்யத்தின் திட்டங்கள் குறித்து பேசிக்கொண்டிருந்தபோது, தொண்டர் ஒருவர் விசிலடித்ததால் கோபமடைந்த கமல்ஹாசன், விசிலடித்தால் நிறைவேறாது, களப்பணி செய்தால் மட்டுமே நிறைவேறும், அமைதியாக கேட்கவும் என கடிந்து கொண்டார். பேச்சின் நடுவே தண்ணீர் குடித்த கமல்ஹாசன் தான் கொண்டுவந்திருந்த தண்ணீரை குடித்துவிட்டு பொதுமக்களிடம் இது கலர் வித்தியாசம் இருப்பதால், டாஸ்மாக் தண்ணீர் என நினைத்துவிட வேண்டாம், நல்ல தண்ணீர் தான் எனக் கூறியதால் கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது. 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...