கோவை : 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, குண்டு பல்ப்பில் தேர்தல் விழிப்புணர்வு சிற்பத்தை கோவை நகை பட்டறை தொழிலாளி வடிவமைத்துள்ளார்.
கோவை : 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, குண்டு பல்ப்பில் தேர்தல் விழிப்புணர்வு சிற்பத்தை கோவை நகை பட்டறை தொழிலாளி வடிவமைத்துள்ளார்.
17-வது நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 11-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்காக, இந்தியா முழுவதும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை சமூக அமைப்பினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த தங்க நகை பட்டறை தொழிலாளி யு.எம்.டி ராஜா, குண்டு பல்ப்பின் உள் இழையில் மனித உருவம் போல் ஒரு சிற்பத்தை உருவாக்கி, அதன் இரு கைகளில் 100% வாக்களிப்போம் என்பதை வெளிக்காட்டும் விதமாக வடிவமைத்து உள்ளார். இதன் கீழே vote என்ற ஆங்கில எழுத்தும், தேர்தல் தேதியையும் உருவாக்கி உள்ளார். மற்றொரு பல்ப்பில் நாடு ஒளிர 100 % வாக்களிப்போம் என்ற வாசகமும் தேர்தல் தேதியை பதிவிட்டு உள்ளார்.
இதனை உருவாக்க 2 நாட்கள் ஆனதாகவும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களின் விழிப்புணர்வுக்காக இந்த படைப்புகளை வைக்க அனுமதி கேட்டு உள்ளதாகவும் கூறிய யு.எம்.டி ராஜா, அனுமதி அளிக்கும் பட்சத்தில், விழிப்புணர்வு ஏற்படுத்தக் காட்சிப்படுத்த இது வைக்கப்படும், என்றார்.