9 வயது மகளை வளர்ப்பு தந்தையே பலாத்காரம் செய்த சம்பவம் : பொள்ளாச்சியில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம்

கோவை : கோவையில் 7 வயது சிறுமி வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் இன்னும் கோவை மக்களின் மனதில் இருந்து நீங்காத நிலையில், பொள்ளாச்சி அருகே 9 வயது சிறுமியை வளர்ப்புத் தந்தையே பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை : கோவையில் 7 வயது சிறுமி வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் இன்னும் கோவை மக்களின் மனதில் இருந்து நீங்காத நிலையில், பொள்ளாச்சி அருகே 9 வயது சிறுமியை வளர்ப்புத் தந்தையே பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கொள்ளுபாளையம் பகுதியில் வசித்து வருபவர்கள் தேவி. இவர் பரமசிவன் (35) என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்துள்ளார். மேலும், தேவிக்கு முதல் திருமணம் ஆன பொழுது 9 வயது மகள் மூன்று வயது மகள் என இருவர் உள்ளனர். இந்த நிலையில், இரண்டாவதாக திருமணம் செய்துள்ள பரமசிவம், தேவியின் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தொடர்ந்து கொடுத்து வந்துள்ளார்.

இதனால், பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமி, தான் படிக்கும் பள்ளியின் ஆசிரியரிடம் இந்த பாலியல் வன்கொடுமை குறித்து தெரிவித்துள்ளார். இதையடுத்து, பள்ளி நிர்வாகத்தினர் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பான 1098 எண்ணுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், வந்த பாதுகாப்பு அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு, பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, போலீசார் வளர்ப்புத் தந்தையான பரமன் என்கிற பரமசிவத்தின் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக இருக்கும் சிறுமியின் வளர்ப்புத் தந்தையை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...