கோவையில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த 3 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது

கோவை : கோவை மாநகரம் மற்றும் மாவட்ட காவல் எல்லைகளில் தொடர்ந்து பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 3 பேர் மீது மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் குண்டர் சட்டம் பாய்ந்தது.


கோவை : கோவை மாநகரம் மற்றும் மாவட்ட காவல் எல்லைகளில் தொடர்ந்து பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 3 பேர் மீது மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் குண்டர் சட்டம் பாய்ந்தது. 

வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் நிரஞ்சன், வடவள்ளி பகுதியைச் சேர்ந்த புண்ணியமூர்த்தி என்பவரின் மகன் அருண் ரீகன் என்ற அருண் ஹாசன், அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் கார்த்திக் ஆகிய 3 பேரின் மீது ஆள் கடத்தல், கொலை முயற்சி, கொள்ளை, வழிப்பறி, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 10 வழக்குகள் தற்போது நிலுவையில் உள்ளன.

அதேபோல, கோவை மாநகரம் மற்றும் மாவட்ட காவல்துறையினரால் பல ஆண்டுகள் தேடப்பட்டு வந்த மூவரும், கடந்த 15 நாட்களுக்கு முன்பு வடவள்ளி பகுதியில் ஒரு பெண்ணுக்கு வன்கொடுமை மற்றும் டாஸ்மாக் பார் அடித்து சேதப்படுத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் தொடர்ந்து குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்ததால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் ஐபிஎஸ், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பாலமுருகன், ஆகியோர் பரிந்துரையின் பேரில், அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜாமணி உத்தரவிட்டார். அதன்படி, கோவை மாவட்டம் முழுவதும் சுமார் 28 குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த மூன்று பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...