கோவை : கோவையில் 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி, வாக்கு முத்திரை போன்ற உடை அணிந்து சமூக ஆர்வலர் ஒருவர் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
கோவை : கோவையில் 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி, வாக்கு முத்திரை போன்ற உடை அணிந்து சமூக ஆர்வலர் ஒருவர் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா சேது முரளி. இவர் 'பசியாற சோறு' என்ற அமைப்பின் மூலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் உடன் இருப்பவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கி வருகிறார். அரசு பள்ளி மாணவர்களுக்கு தேவையான உபகரணங்கள், உடல் தானம் குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, 'ஓட்டுரிமை ஜனநாயக கடமை' என்பதை வலியுறுத்தி 100 சதவிகித வாக்குரிமை நடைபெற வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வாக்கு முத்திரை போன்ற உடை அணிந்து, கையில் பதாகை ஏந்தி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டார். வாக்கு முத்திரை உடை அணிந்து இன்று முதல் மூன்று நாட்களுக்கு கோவை மக்களிடம் நேர்மையாக ஓட்டளிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்த இருப்பது குறிப்பிடத்தக்கது.