புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை குற்றம்சாட்டி, அவரது பேத்தி வெளியிட்டுள்ள வீடியோவை நீக்குமாறு யூடியூப்புக்கு கிரண்பேடி தரப்பில் வழக்கறிஞர் மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை குற்றம்சாட்டி, அவரது பேத்தி வெளியிட்டுள்ள வீடியோவை நீக்குமாறு யூடியூப்புக்கு கிரண்பேடி தரப்பில் வழக்கறிஞர் மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
மொபைல் போனில் அவரே பேசி பதிவு செய்த அந்த வீடியோவில், "நான் கிரண்பேடியின் ஒரே பேத்தி. அப்பாவுக்கும், அம்மாவுக்கும் இடையில் எவ்வளவோ பிரச்சினைகள் வந்திருக்கின்றன. அப்போது உங்கள் பிரச்சினைகளுக்கு இடையில் வரமாட்டேன் என்று கூறினீர்களே பாட்டி. இப்போது மட்டும் ஏன் பாட்டி வருகிறீர்கள்..?. போலீஸை வைத்து அப்பாவை ஏன் கஷ்டப்படுத்துகிறீர்கள்..?. என்னை யாரும் கடத்தவில்லை. நான் அப்பாவுடன் சந்தோஷமாக இருக்கிறேன்,' என்று குறிப்பிட்டு தனது தந்தையைக் காட்டுகிறார்.
அதைத்தொடர்ந்து, மீண்டும் அறைக்குள் வந்த கிரண்பேடி பேத்தி, "எனது அம்மாவை நினைத்தும், பாட்டியை நினைத்தும் வெட்கப்படுகிறேன். என் அப்பாவுக்கு ஆதரவு தர விரும்புவோர் கருத்து பதிவிடுங்கள்" என்று குறிப்பிட்டு வீடியோவை நிறைவு செய்கிறார். இந்த வீடியோ புதுச்சேரியிலும், சமூக வலைதளங்களிலும் அதிகளவில் பரவி வருகிறது.
இதுதொடர்பாக ஆளுநர் கிரண்பேடியிடம் கேட்டதற்கு, "இது முடிந்து போன விவகாரம். நீதிமன்றம் அளித்த நோட்டீஸை வழக்கறிஞர் மூலம் யூடியூப்பில் அளித்து விட்டோம். குழந்தை இப்போது விளையாட்டுத்தனமாக பேசுகிறது. குழந்தையின் தலையீட்டால் இது மிகவும் உணர்ச்சிகரமாக மாறியிருக்கிறது. இதுகுறித்து கருத்துகள் கூறுவதோ, எழுதுவதோ பொருத்தமாக இருக்காது," என்று கூறினார்.