சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய 'ஜனநாயகத்தைக் காப்பாற்றுங்கள்' என்ற கூட்டறிக்கை : இயக்குநர் கோபி நைனார் நம்மிடம் கூறுவது என்ன...?

www.artistuniteindia.com என்ற இணைய தளத்தில் சினிமா பிரபலங்கள் கருத்துகளை தெரிவித்து கூட்டறிக்கையை வெளியிட்டு, சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இயக்குநர் கோபி நைனார், சிம்ப்ளிசிட்டியிடம் இந்த கூட்டறிக்கை குறித்து விளக்கம் அளித்துள்ளார்.


www.artistuniteindia.com என்ற இணைய தளத்தில் சினிமா பிரபலங்கள் கருத்துகளை தெரிவித்து கூட்டறிக்கையை வெளியிட்டு, சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இயக்குநர் கோபி நைனார், சிம்ப்ளிசிட்டியிடம் இந்த கூட்டறிக்கை குறித்து விளக்கம் அளித்துள்ளார். 

பா.ஜ.க.வை இந்த தேர்தலில் ஓரங்கட்டி 'ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள்' என்று இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்ட சினிமா துறையைச் சேர்ந்த 100-க்கும் அதிகமான பிரபலங்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். www.artistuniteindia.com என்ற இணைய தளத்தில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. இதில், 103 சினிமா பிரபலங்கள் கையெழுத்திட்டுள்ளனர். அவர்களில் வெற்றி மாறன், ஆனந்த் பத்வர்தன், சனல்குமார் சசிதரன், சுதேவன், தீபா தன்ராஜ், குர்விந்தர் சிங் உள்ளிடோர் அடங்குவர். 

இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :- வரலாறு காணாத அளவில் நமது நாடு ஒரு இக்கட்டான நேரத்தில் உள்ளது. கலாச்சாரம், புவியியல் ரீதியாக நமக்குள் பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. இருப்பினும் நாடு, இந்தியர் என்கிற அளவில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். மிகச் சிறந்த நாடு ஒன்றில் இருப்பதை எண்ணி இந்திய குடிமக்கள் பெருமையும், மகிழ்ச்சியும் கொள்கின்றனர். இருப்பினும், இங்கு குறிப்பிட்டவை மீது சில அதிர்வுகள் ஏற்படத் தொடங்கியுள்ளனர். ஃபாசிசம் நம் அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த மக்களவை தேர்தலில் நாம் சரியான நபரை தேர்வு செய்யாவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகி விடும். 2014-ல் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னர், நிலைமை இன்னும் மோசமாகி விட்டது என்பதை நாடே அறியும். அக்கட்சிக்கு எதிராக யார் பேசினாலும், அவர்கள் மீது தேசவிரோத முத்திரை குத்தப்படுகிறது. அரசியலமைப்பு சட்டத்தை மதிக்கக் கூடிய, மக்களின் கருத்து சுதந்திரத்தைப் பாதுகாக்கின்ற அரசை தேர்ந்தெடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டறிக்கையில் ஏன், எதற்காக கையெழுத்திட்டேன் என்பது குறித்து இயக்குநர் கோபி நைனார், சிம்ப்ளிசிட்டியுடனான தொலைப்பேசி உரையாடலில் கூறியதாவது :- இந்த கூட்டறிக்கையானது முதன் முதலில் சனல்குமார் சசிதரனிடம் இருந்து தொடங்கியது. தற்போதைய சூழலில் இது முக்கியான முயற்சி என்பதை உணர்ந்தேன். சமுதாயத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாலியல் வன்கொடுமை என்பது ஒருவிதமான ஒடுக்குமுறையாகும். பெண்களின் பாதுகாப்பில் தோல்வியடைந்த அரசுக்கு எதிராக பொதுமக்கள் குரல் கொடுக்க வேண்டிய தருணம் இது. பெண்கள், குழந்தைகள் மற்றும் தலித்துகளுக்கு எதிராக அநீதி இழைக்கப்படுகிறது. 

 

திரைப்படங்களில் எடுத்துக் கொண்டாலே, விலங்குகளைக் கொடுமைப்படுத்துவது போன்ற காட்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், அவற்றிற்கென விலங்குகள் நலவாரியம் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. ஆனால், பெண்கள் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளது. ஏனெனில், திரைப்படங்களில் பெண்கள் பலாத்காரம் செய்வது போன்ற காட்சிகளை எதிர்க்க எந்தவிதமான அமைப்பும் இல்லை. மேலும், இதுபோன்ற காட்சிகளில் நடிகைகள் பொருத்தமான நடிப்பை வெளிக்காட்டாவிட்டாலும், அதைப்பற்றி நாங்கள் கவலை கொள்வதில்லை. இதுவே, பெண்கள் எவ்வாறு நடத்தப்படுகின்றார்கள் என்பதை வெளிக்காட்டுகிறது. இதில், நேரடியாக அரசை தொடர்புபடுத்த முடியாது, ஆனால், சட்டதிட்டங்களைக் கடுமையாக்கலாம். மேலும், பெண்களை நல்ல முறையில் வழிநடத்தலாம்.

அண்மையில் நடைபெற்ற பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த விவகாரம் தொடர்பான ஆடியோவை 3 நொடிகளுக்கு மேல் என்னால் கேட்க முடியவில்லை. எனக்கும் ஒரு மகள் இருக்கிறார். அவர் வீட்டில் இருக்கிறார். இதுபோன்ற சம்பவங்களை தடுக்க சரியான நடவடிக்கையை அரசு எடுக்காதது வேதனையளிக்கிறது. நமக்கு தங்களின் உணர்வு வெளிப்பாடுகளை வெளிக்காட்ட சுதந்திரம் இல்லை. இது வெறும் இயக்குநர்களுக்கு மட்டுமல்ல, எழுத்தாளர்கள், நடிகர்கள் மற்றும் சாதாரண மக்கள் என அனைத்து தரப்பினரும், பொறுப்பை உணர்ந்து வாக்களிக்க வேண்டும், எனக் கூறினார். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...