ஓட்டுக்கு நோட்டு வாங்கினால் அரசின் குறைகளை தட்டி கேட்க முடியாது : வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் பேச்சு

நீலகிரி : ஓட்டுக்கு நோட்டு வாங்கினால் நலத்திட்டங்களை கேட்கமுடியாது என்றும், அரசின் குறைகளை தட்டி கேட்க முடியாது எனவும் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.


நீலகிரி : ஓட்டுக்கு நோட்டு வாங்கினால் நலத்திட்டங்களை கேட்கமுடியாது என்றும், அரசின் குறைகளை தட்டி கேட்க முடியாது எனவும் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார். 



நீலகிரி மாவட்டம் உதகையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நீலகிரி மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான இன்னசென்ட் திவ்யா வாக்குப்பதிவு குறித்த குறும்படம் மற்றும் டீ சர்ட்களை வெளியிட்டார். அந்த டி-ஷர்ட்களில் ‘ஓட்டுபோடுங்க பணம் வாங்காதீங்க’ போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.



தொடர்ந்து, நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “பொது மக்கள் ஓட்டுக்காக பணம் பெறுவதை தவிர்க்க

வேண்டும். பணம் பெறுபவர்கள் அரசின் குறை சொல்லுவதற்கும், நலத்திட்டங்ளை கேட்பதற்கும் தகுதியற்றவர்கள்,” என கூறினார்.

மேலும், தேர்தலுக்கான 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து அனைத்து கிராமப்புற மக்களிடையே சென்றடைய ஒலிம்பிக் விளக்கு ஏற்றப்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...