கோவையில் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது தாக்குதல் : 3 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை : கோவையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தோஷ் குமார் மீது தாக்குதல் நடத்திய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


கோவை : கோவையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தோஷ் குமார் மீது தாக்குதல் நடத்திய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை பன்னிமடை அருகே 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, குற்றவாளி மீது அதிகபட்ச தண்டனை வழங்கக் கோரி பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. அதேபோல, கைது செய்யப்பட்ட சந்தோஷ் குமாரை மக்கள் முன் நிறுத்தி தண்டனை கொடுக்க வேண்டும் எனவும் பொதுவெளியில் பேசப்பட்டு வந்தது. இதனால், குற்றவாளி சந்தோஷ் குமார் மீது பொதுமக்கள் எந்நேரமும் தாக்குதல் நடத்தப்படும் என்பதால், கைது செய்யப்பட்டதிலிருந்து நீதிபதி முன் ஆஜர்படுத்துவதில் இருந்து சிறை செல்வது வரை போலீசார் ரகசியமாக அழைத்துச் சென்றனர். 

இந்த நிலையில், நேற்று மதியம் திடீரென கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள சட்ட மருத்துவத்துறை ஆய்வகத்திற்கு சந்தோஷ் குமாரை போலீசார் மரபணு பரிசோதனைக்காக அழைத்து வந்தனர். இதையடுத்து, அந்தப் பகுதியில் ஆங்காங்கே நின்று கொண்டிருந்த நபர்கள் சந்தோஷ்குமார் வெளியில் வரும்பொழுது தாக்குதல் நடத்தினர். அப்போது, அவர்களிடம் இருந்து போலீசார் சந்தோஷ் குமாரை பாதுகாப்புபடுத்தி வேகவேகமாக ஜீப்பில் அழைத்துச் சென்றனர். இந்த நிலையில், குற்றவாளி மீது தாக்குதல் நடத்திய ஜலாலுதீன், நசீர், பன்னா அபு ஆகியோர் மீது பந்தய சாலை காவல் நிலையத்தில் காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்பட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...