அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பற்றி அவதூறு பேச்சு : கோவையில் இரு காவல் நிலையங்களில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு

கோவை : தொண்டாமுத்தூர் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குறித்து அவதூறாக பேசியதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மீது கோவையில் உள்ள இரு காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



கோவை : தொண்டாமுத்தூர் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குறித்து அவதூறாக பேசியதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மீது கோவையில் உள்ள இரு காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கோவையில் கடந்த 2 நாட்களாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இதன் ஒரு பகுதியாக நேற்று தொண்டாமுத்தூரில் பொள்ளாச்சி தி.மு.க. வேட்பாளர் சண்முக சுந்தரத்திற்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

அப்போது, பேசிய ஸ்டாலின், “அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் ஊழல்கள் குறித்த பல ஆதாரங்கள் எங்களுக்கு கிடைத்து இருக்கின்றது. இப்போது அவற்றை வெளியிட்டால் நடவடிக்கை இருக்காது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் ஆதாரங்களை கொண்டு வேலுமணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார். 

குறிப்பாக, ரூ. 100 கோடி அளவிலான டெண்டர்கள் அனைத்தும் உள்ளாட்சித் துறை அமைச்சரின் சகோதரர் மற்றும் நண்பர்களின் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது. ஊழல் பணத்தை குவித்து வைத்திருக்கும் அமைச்சர் வேலுமணி முதலமைச்சரையே மிரட்டுகிறார். ஊழலில் எடப்பாடியை மிஞ்சியவர் வேலுமணி,” என பேசினார்.

அதேபோல, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் உள்ள பார் நாகராஜன் என்பவர் துணிச்சலாக இருப்பதற்கு வேலுமணி கொடுக்கும் தைரியம் தான் காரணம் எனவும், அமைச்சர்களுக்கும், அ.தி.மு.க.வினருக்கும் ஆதரவாக சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தி வருகின்றது எனவும் அடுக்கடுக்காக ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

இதேபோல, நேற்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது மு.க ஸ்டாலின் எவ்வித அடிப்படை ஆதாரம் அற்ற பொய்யான மூன்று புகார்களைக் கூறி கோவையில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார். 

அதேபோல, மு.க ஸ்டாலின் தொடர்ந்து எங்கள் மீது ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டுகளை பேசி பிரச்சாரம் செய்து வருகிறார். இது தொடர்ந்தால் அவர் மீது நாங்கள் சட்டப்படி வழக்கு தொடருவோம், என பேசினார்.

இந்நிலையில் இது தொடர்பாக அ.தி.மு.க. வழக்கறிஞர்கள் தொண்டாமுத்தூர் மற்றும் குனியமுத்தூர் காவல்நிலையங்களில் புகார் அளித்திருந்தனர். தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் அ.தி.மு.க. வழக்கறிஞர் ராமச்சந்திரன் என்பவர் கொடுத்த புகாரின் பேரிலும், குனியமுத்தூர் காவல்நிலையத்தில் அ.தி.மு.க. வழக்கறிஞர் வெற்றிவேல் என்பவர் கொடுத்த புகாரின் பேரிலும், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

மேலும், இரு பிரிவினரிடையே இடையே மோதலை ஏற்படுத்த முயலுதல், மக்கள் பிரதிநிதிகளை அவதூறாக பேசுதல், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...