2019 – கோவை தேர்தல் களம் வெற்றியை தீர்மானிக்கும் சவால்கள். சமாளிக்குமா பாஜக?...

தமிழ்நாட்டில் பாஜக வெற்றி பெற அதிக வாய்ப்புள்ள தொகுதியாக கோவை கருதப்பட்டது. ஆனால் பாஜக எளிதில் வெற்றி பெற முடியாது என்பதே கள எதார்த்தம். பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு சவாலாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் இருக்கிறார்.


தமிழ்நாட்டில் பாஜக வெற்றி பெற அதிக வாய்ப்புள்ள தொகுதியாக கோவை கருதப்பட்டது. ஆனால் பாஜக எளிதில் வெற்றி பெற முடியாது என்பதே கள எதார்த்தம். பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு சவாலாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் இருக்கிறார். 

இருவருமே ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள் என்பதால், கடந்த கால செயல்பாடுகளோடு ஒப்பீட்டு நிகழ்கால பிரச்சணைகளை பற்றி பேசி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

பாஜகவை சமாளிக்க அக்கட்சியின் முன்புள்ள சவால்களை மையப்படுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் பரப்புரை செய்து வருகின்றனர் ஜிஎஸ்டி வரி விதிப்பு நாடு முழுவதும் ஒரே வரி என ஜி.எஸ்.டி. என்ற சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பை பாஜக அரசு நடைமுறைப்படுத்தியது. ஆனால் தொழில் துறையினருக்கு தீராத தலைவலியாக தொடர்ந்து வருகிறது. அதிகப்படியான வரி விதிப்புகளால் தொழில் முடக்கம் ஏற்பட்டு இருப்பதாக தொழில்துறை கூறுகின்றனர். தொழிற்கூடங்கள் மூடப்படவும், தொழிலாளர்கள் வேலை இழக்கவும் ஜிஎஸ்டி காரணமாக இருக்கிறது. தொழில் நகரமான கோவையும் ஜிஎஸ்டி வரிகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொழில் துறையினர் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஜிஎஸ்டி வரியும் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக விளங்குகிறது. அதற்கேற்ப அனைத்து கட்சிகளும் ஜிஎஸ்டி வரி குறைப்பை முக்கிய வாக்குறுதியாக முன்வைத்துள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சியின் முதல் வாக்குறுதியே, ஜிஎஸ்டி வரிகளை குறைத்து, சிறுகுறுந்தொழில்களை பாதுகாப்பதும், மூடப்பட்ட தொழிற்சாலைகளை திறக்க நடவடிக்கை எடுப்பதும் தான். கோவையின் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் தொழிற்துறையினரிடம் ஜிஎஸ்டி மீதுள்ள அதிருப்தியை, வாக்குகளாக மாற்ற மார்க்சிஸ்ட் கட்சி முயற்சிக்கிறது.

இதனை உணர்ந்த பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், ஜிஎஸ்டியினால் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது உண்மை தான் என ஒப்புக்கொண்டுள்ளார். தொழில் துறையை பாதுகாக்கும் வகையில் ஜிஎஸ்டி வரி குறைப்பு செய்யப்படுமென அவர் வாக்குறுதி அளித்துள்ளார். கம்யூனிஸ்ட்களால் ஜிஎஸ்டி வரியை குறைக்க முடியாது எனவும், பாஜகவால் தான் அதனை செய்ய முடியுமென அவர் சொல்கிறார்.

அதேசமயம் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு இத்தனை நாட்களாக ஜிஎஸ்டி வரிகளை குறைக்காதது ஏன் என்ற கேள்விக்கு, பாஜகவினரிடம் பதில் இல்லை. 

தேர்தலுக்கு வரும் சீசன் பறவை ‘தேர்தல் வரும் போது மட்டுமே, கோவை பக்கம் தலைகாட்டும் சீசன் பறவை சிபிஆர்’ என மார்க்சிஸ்ட் கட்சியினர் தேர்தல் களத்தில் முன்வைத்துள்ள அடுத்த முக்கியமான குற்றச்சாட்டு. இந்த குற்றச்சாட்டு பாஜகவினரிடமும் உள்ளது. 

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எதிராக பாஜகவினரே நடத்திய போராட்டங்கள் இதற்கு சாட்சி. தேர்தல் இல்லாத நேரங்களில் கோவையில் நடக்கும் பொது நிகழ்ச்சிகள் மட்டுமின்றி, கட்சி நிகழ்வுகளில் கூட பார்க்க முடிவதில்லை என கூறுகின்றனர திருப்பூரை சேர்ந்தவர் சி.பி.ராதாகிருஷ்ணன். 6 ஆண்டுகளாக கோவை எம்.பி.யாக இருந்த போதும், மத்திய கயிறு வாரிய தலைவராக கடந்த 5 ஆண்டுகள் இருந்த போதும், கோவைக்கு எதுவும் செய்யவில்லை என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புகார். 

அதேபோல உட்கட்சியிலும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எதிரான அலை வீசுகிறது. பாஜகவில் உட்கட்சி பூசல் இல்லை என சிபிஆர் மறுப்பு தெரிவித்தாலும், ஒருங்கிணைத்து தேர்தல் பணியாற்றுகிறார்களா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது கோவைக்கு தேவை செயல் வீரர் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சமூக வலைதளங்களில் பரப்புரை மேற்கொள்கின்றனர். அதில் தேர்தல் முடிந்தால் சிபிஆரை பார்க்க முடியாது எனவும், அவரை பார்க்க கால் சீட் வாங்கி காத்திருக்க வேண்டியிருக்கும் எனக்கூறும் கட்சியினர், வென்றாலும், தோற்றாலும் மக்களோடு இருந்து பணியாற்றும் செயல்வீரர் பிஆர்என் என்கின்றனர்.

கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணனின் செயல்பாடுகள் குறைவும், உட்கட்சி பூசலும், பாஜகவின் முன்புள்ள இரண்டாவது சவால். கூட்டம் சேர்க்கும் தினகரன் பாஜகவின் வெற்றிக்கு சாதகமாக இருப்பது அதிமுகவின் வாக்கு வங்கி. கோவை மாவட்டம் என்பது அதிமுகவின் கோட்டையாக கருதப்படுவதும், அதிகாரமும், செல்வாக்கும் உள்ள பிரமுகர்கள் இருப்பதும் பலமாக கருதப்படுகிறது. ஒ.பன்னீர்செல்வம் தர்ம யுத்தத்தினால் அதிமுகவில் அணிகள் பிளவுபட்டன. பின்னர் எடப்பாடி பழனிசாமியோடு சேர்ந்து, டிடிவி தினகரன் விலக்கப்பட்டார். கோவையில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாளர்கள் இருந்தாலும், கோவையில் முக்கியமான நபர்கள் யாரும் அந்த அணிக்கு செல்லவில்லை. 

டிடிவி தினகரனின் அமமுக அணிக்கு சென்ற முன்னாள் அமைச்சர் தமோதரனும், மண்டும் அதிமுகவில் ஐக்கியமாகிவிட்டார் ஆனால் கோவையில் முக்கிய ஆளுமைகள், பிரபலான பிரமுகர்கள் அமமுகவில் இல்லையென்றாலும், டிடிவி தினகரன் பேச்சை கேட்க அதிக கட்டம் கூடுகிறது. கோவை நகரில் ராமநாதபுரத்தில் ஒரே இடத்தில் துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்திற்கு கூடிய கூட்டத்தை விட, பல இடங்களில் டிடிவி தினகரனுக்கு கூடிய கூட்டம் அதிகம் என அமமுகவினர் கூறுகின்றனர். 

கூட்டம் ஒட்டுகளாக மாறாது என அதிமுகவினர் சொல்கின்றனர். ஆனால் ஆர்.கே.நகரில் டிடிவி தினகரனுக்கு கூட்டமும் சேர்ந்தது, ஒட்டும் விழுந்தது என்பதை மறுக்க முடியாது. அமமுக கோவையில் வெற்றி பெற வாய்ப்பில்லை என்றாலும், பிரிக்கும் வாக்குகள் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும்.

டிடிவி தினகரனின் வாக்கு பிரிப்பு என்பது பாஜக முன்புள்ள மூன்றாவது சவால்.

ஆளுங்கட்சி மீதான அதிருப்தி மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவோடு, மாநிலத்தில் ஆட்சியில் உள்ள அதிமுக கூட்டணி சேர்ந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் வீசிய மோடி ஆதரவு அலை, தற்போது வெகுவாக குறைந்துள்ளது.தேர்தலுக்கு முன்பு அளித்த பல வாக்குறுதிகளை ஆட்சியில் பாஜக செய்யவில்லை என்பது எதிர்கட்சிகளின் புகாராக உள்ளது. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு, கருப்பு பண மீட்பு, வங்கி கணக்கில் 15 இலட்ச ரூபாய் பணம் செலுத்துதல் உள்ளிட்டவை எதுவும் நிறைவேற்றவில்லை. அதேபோல தொழில்வளர்ச்சிக்கு அளித்த வாக்குறுதிகளும் நிறைவேற்றவில்லை. 

பாஜகவிற்கு எதிரான மனநிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது. அதேபோல எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் மீதும் அதிருப்தி நிலவுகிறது. இரண்டு கட்சிகள் மீதான அதிருப்தியை வாக்குகளாக மாற்ற, எதிர்கட்சிகள் முயற்சிக்கின்றன நீட் தேர்வு விலக்கு, மாநில பட்டியலில் கல்வி, மாநில உரிமைகள் சார்ந்த விஷயங்களில் அதிமுக தேர்தல் வாக்குறுதிகளில் வலியுறுத்தப்படுமென இருக்கிறது. திமுகவின் தேர்தல் அறிக்கையில் உள்ளவற்றை செயல்படுத்துவோம் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேபோல அதிமுக, பாஜக கூட்டணியால் சிறுபான்மை வாக்குகள் திமுக கூட்டணிக்கே செல்ல அதிக வாய்ப்புள்ளது. இன்னொரு பக்கம் பாஜகவிற்கு ஆதரவு இல்லை என அதிமுக கூட்டணி கட்சிகளான மனிதநேய ஜனநாயக கட்சி, கொங்கு இளைஞர் பேரவை ஆகியவை அறிவித்துள்ளன. அதிருப்தி வாக்குகளும், சிறுபான்மையின வாக்குகளும் அடுத்த சவால்.விமர்சனங்கள் குறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது கேரள மாநிலத்தை மையப்படுத்தி வைக்கப்படும் விமர்சனங்களை தவிர, பெரியளவில் புகார்கள் இல்லை. 

ராகுல்காந்தியை கேரளாவில் எதிர்ப்பதும், தமிழ்நாட்டில் ஆதரிப்பதும் என்ற இரட்டை செயல்பாடு முக்கிய விமர்சனமாக உள்ளது. இது மட்டுமே கோவையில் பேசிய ஒ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் அக்கட்சி மீது முன்வைத்துள்ள விமர்சனம். இதை தாண்டி அவர்கள் வேறு எந்த விமர்சனங்களையும் வைக்கவில்லை. மற்றொரு பிரச்சணையான பாஜகவிற்கு ஐயப்பன் கோவில் பிரச்சணை கோவையில் ஒலிக்குமா என்பது கேள்விக்குறி தான். 

கோவையில் அதிக முறை கம்யூனிஸ்ட்கள் வென்றாலும், எதுவும் செய்யவில்லை என்கின்றனர் கோவை பாஜகவினர். தங்களது ஆட்சியில் தொழில் வளர்ச்சி, நலத்திட்டங்களை பாஜக பட்டியலிட்டு, சாதனைகளை சொல்கின்றனர். பாஜகவினரின் புகாருக்கு, மார்க்சிஸ்ட் கட்சியினர் பதிலடியாக தங்களது செயல்பாடுகளை விளக்கி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் பாஜகவிற்கு எதிரான அலை பரவலாக வீசுகிறது. அதனை பலப்படுத்தும் சவால்களை சமாளித்து, பாஜகவின் முதல் தமிழக எம்.பி.யான சி.பி.ராதாகிருஷ்ணன் மூன்றாவது வெற்றியை பெற்று கரை சேர்வாரா என்பது தேர்தல் முடிவுகளின் போதே தெரியும்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...