தேர்தல் வெற்றிக்காக பணத்தை வாரி இரைக்கும் அரசியல் கட்சிகள் : தமிழகத்தில் ரூ. 377 கோடி பறிமுதல்

கோவை : வரும் நாடாளுமன்ற தேர்தலில் கோடிக்கணக்கான பணத்தை செலவு செய்து தேர்தலில் வெற்றிபெற அரசியல் கட்சிகள் முயற்சி காட்டி வரும் நிலையில், விதி மீறுபவர்கள் மீது முடிந்த வரை வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது.


கோவை : வரும் நாடாளுமன்ற தேர்தலில் கோடிக்கணக்கான பணத்தை செலவு செய்து தேர்தலில் வெற்றிபெற அரசியல் கட்சிகள் முயற்சி காட்டி வரும் நிலையில், விதி மீறுபவர்கள் மீது முடிந்த வரை வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது.



தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், தற்போது பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ளது. இந்த நிலையில், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக அரசியல் கட்சிகள் மற்றும் பல நபர்கள் கணக்கில் இல்லாத பணங்களை கொண்டு செல்கின்றனர். இப்படி கொண்டு செல்லும் பணங்கள் ஆங்காங்கே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பிடிக்கப்படுகிறது. அதே சூழலில், கோடிக்கணக்கான ரூபாய்களை செலவு செய்து ஓட்டுகளை பெற அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக் கொள்கின்றன. மேலும், வெற்றி வாய்ப்பை மட்டுமே கணக்கிடும் அரசியல் கட்சிகள் விதிகளுக்கு அப்பாற்பட்டு வாக்குக்கு பணம் கொடுப்பதை கணக்கிலே கொள்வதில்லை.



அதேபோல, முந்தைய காலங்களில் பிரச்சாரத்திற்கு பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு வருவர். ஆனால், தற்போது பிரச்சாரத்திற்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கைகள் குறைவாகி வருகிறது. இதனால், பொதுமக்களுக்கு ரூ. 200, ரூ. 300, ரூ. 500 என கொடுத்து வந்த அரசியல்வாதிகள் தற்போது ஆயிரம் ரூபாய் என கொடுக்க தயாராகி உள்ளனர். இந்த ஆயிரம் ரூபாய் கொடுக்கும் பொழுது பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பிரச்சாரத்திற்கு வருவதாக அரசியல் கட்சியினர தெரிவிக்கின்றனர்.



இந்த நிலையில், இந்த தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகள் எடுக்கிறது. ஆனாலும், இந்த முயற்சிகள் முழுமையாக பயன் அளிப்பதில்லை என சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

அதேபோல, சென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் போல வாக்காளர்களை கவர பணப் பட்டுவாடா அதிக அளவில் இருக்கும் என உளவுத்துறையினர் எச்சரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாண்டிச்சேரி, தமிழ்நாடு என இருக்கும் 40 தொகுதிகளில், குறிப்பாக, 24 தொகுதிகளில் பணப்பட்டுவாடா நடப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, முன்னாள் அமைச்சர்கள், அமைச்சர்களின் மகன்கள், முக்கிய நபர்கள், ஸ்டார் வேட்பாளர்கள் போன்றவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் கோடிக்கணக்கான செலவுகளை செய்து எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்ற நோக்கில் செலவு செய்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.



இப்படி தொடர்ந்து வெளியாகும் தகவல்களால் தேர்தல் ஆணையம் பறக்கும் படையினர் துணையுடன் பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இதில், கோவை மாவட்டத்தில் மட்டும் கிட்டத்தட்ட தேர்தல் விதிமீறல் என 51 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான மேட்டுப்பாளையம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் விதிமீறபட்டதாக 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல, சூலூரில் 5, கிணத்துக்கடவு பகுதியில் 10, பொள்ளாச்சி பகுதியில் 11, வால்பாறையில் 3 என மொத்தம் 38 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கோவை மாநகர பகுதியில் 13 வழக்குகள் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 51 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.



பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன் தினம் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், பொதுமக்களுக்கு டோக்கன் ஆக போலி காகித ரூபாய் நோட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் பேரில் அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் மணிபாரதி மீது போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இப்படியாக வழக்கு பதிவுகளும், பணப்பட்டுவாடாக்களும் சரி சமமாக நடைபெற்று வருகிறது.

இதுவரை நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில் பிடிபட்ட பணம், மது பாட்டில்கள், போதை பொருட்களின் விவரங்கள்



Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...