கோவை : நான் உங்களின் நண்பன் என கோவையில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அ.ம.மு.க. வேட்பாளர் அப்பாதுரை தெரிவித்துள்ளார்.
கோவை : நான் உங்களின் நண்பன் என கோவையில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அ.ம.மு.க. வேட்பாளர் அப்பாதுரை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அப்பாதுரை, பி.என்.புதூர், வடவள்ளி ஆகிய பகுதிகளில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் பேடுகையில், “ நான் உங்களின் நண்பன். தேர்தலில் வெற்றிபெற்றாலும் கூட இதே உறவுதான். நீங்கள் எந்த நேரத்திலும் என்னை தொடர்பு கொண்டு பேசலாம். மக்களுக்கு பயன்படும் அனைத்து திட்டங்களையும் கொண்டு வருவேன்,” என்றார்.

முன்னதாக, பி.என்.புதூர் பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் மற்றும் சிறு வியாபாரிகள் என அனைவரிடமும் கிஃப்ட் பாக்ஸ் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.தொடர்ந்து, பி.என்.புதூர், வடவள்ளி பகுதிகளில் வீதி பிரச்சாரத்திலும் ஈடுபட்டார்.