கோவை : தொடர்ந்து ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி பிரச்சாரம் செய்து வரும் மு.க ஸ்டாலின் மீது சட்டப்படி வழக்கு தொடுக்கப்படும் என மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆவேசமாக தெரிவித்தார்.
கோவை : தொடர்ந்து ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி பிரச்சாரம் செய்து வரும் மு.க ஸ்டாலின் மீது சட்டப்படி வழக்கு தொடுக்கப்படும் என மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆவேசமாக தெரிவித்தார்.
நீலகிரி நாடாளுமன்ற அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் எம். தியாகராஜனை ஆதரித்து தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மேட்டுப்பாளையத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மேட்டுப்பாளையம் பகுதியில் பேருந்து நிலையம் அருகே பிரச்சாரம் மேற்கொண்ட அவர் பேசியதாவது :- தமிழகத்தில் மழை பொய்த்துபோன காரணத்தால் விவசாயிகளும் ஏழை, எளிய மக்களும் வறுமையில் வாடி வருவதை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு ரூ. 2,000 வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. இத்திட்டம் துவங்கிய நான்காவது நாளிலேயே இதனை தடுக்க வேண்டும் என்ற நோக்கில், நீதிமன்றம் சென்று தி.மு.க.வினர் தடுத்துள்ளனர். இந்த தடையானையை நீதிமன்றத்தின் மூலமே தகர்த்து எரிந்து மிக விரைவில் ஏழை, எளிய மக்களுக்கு இரண்டாயிரம் வழங்கப்படும் என உறுதி அளிக்கிறேன். இ .பி. எஸ் மற்றும் ஓ.பி.எஸ் இருவரும் சேர்ந்து தமிழகத்தை தீ வைத்து எரித்து விட்டதாக ஸ்டாலின் புகார் கூறுகிறார். ஆனால், தி.மு.க.வின் குடும்ப பிரச்சனை காரணமாக, அவர்களே அவர்களது நிறுவனத்திற்கு தீ வைத்து கொண்டார்கள். அதற்கான தீர்ப்பும் தற்போது வெளிவந்துள்ளது. தி.மு.க என்றாலே வன்முறை வெறியாட்ட கட்சி என்பதை தமிழக மக்கள் அறிவார்கள்.

எங்களது உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது மு.க ஸ்டாலின் எவ்வித அடிப்படை ஆதாரம் அற்ற பொய்யான மூன்று புகார்களை கூறி கோவையில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். ஏற்கனவே, எங்களது அமைச்சர் எஸ்.பி. வேலுமணி என் மீது தி.மு.க. தொடுத்துள்ள வழக்கில் குற்றச்சாடு நிருபணமாகி, நீங்கள் வென்றால் நான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலை விட்டு விலகி கொள்கிறேன். அதேநேரம் நான் குற்றமற்றவன் என நிருபிக்கப்பட்டால், நீங்கள் தி.மு.க தலைவர் பதவியில் இருந்தும், எதிர்கட்சி தலைவர் பதவில் இருந்து விலகி அரசியலை விட்டு வெளியேற தயாரா..? என எஸ்.பி வேலுமணி ஸ்டாலிக்கு சவால் விட்டார் ஆனால், ஸ்டாலினிடம் இருந்து இதுவரை பதில் இல்லை. மு.க ஸ்டாலின் தொடர்ந்து எங்கள் மீது ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டுகளை பேசி பிரச்சாரம் செய்து வருகிறார். இது தொடர்ந்தால் அவர் மீது நாங்கள் சட்டப்படி வழக்கு தொடருவோம், என பேசினார்.
இப்பிரச்சாரத்தின் போது அ.தி.மு.க வேட்பாளர் தியாகராஜன், தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் உடன் இருந்தனர்.