பா.ஜ.க. வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து வாக்கு சேகரிக்க பிரதமர் மோடி வரும் 9-ம் தேதி கோவை வருகை

கோவை : பா.ஜ.க. வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து வாக்கு சேகரிக்க பிரதமர் மோடி வரும் 9-ம் தேதி கோவை வர இருப்பதாக அக்கட்சியின் மாநில பொது செயலாளர் வானதி ஶ்ரீனிவாசன் தெரிவித்தார்.


கோவை : பா.ஜ.க. வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து வாக்கு சேகரிக்க பிரதமர் மோடி வரும் 9-ம் தேதி கோவை வர இருப்பதாக அக்கட்சியின் மாநில பொது செயலாளர் வானதி ஶ்ரீனிவாசன் தெரிவித்தார்.

கோவை நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியின் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். இதையடுத்து, பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து அமித்ஷா, ஓ.பி.எஸ். உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கடந்த செவ்வாய்கிழமை கோவையில் பிரச்சாரம் மேற்கொண்டனர். 

இந்த நிலையில், மாநில பொது செயலாளர் வானதி ஶ்ரீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :- வரும் 9-ம் தேதி கொடிசியா மைதனத்தில் நடைபெற இருக்கும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார். இந்தக் கூட்டத்தில், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் முதலமைச்சர் எடப்படி பழனிசாமி, தே.மு.தி.க.வின் பிரேமலதா விஜய்காந்த், தமிழ் மாநில காங்கிரசின் ஜி.கே. வாசன், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத் குமார் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவிருக்கின்றனர். மேலும், 5 லட்சம் பார்வையாளர்கள் அமரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி.யினால் எந்தப் பயனும் இல்லை என காங்கிரஸ் நடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், காங்கிரஸ் ஆட்சியின் போதே ஜி.எஸ்.டி., அமல்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு, தோல்வியில் முடிந்தது. அதேபோல, பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி.,யினால் வர்த்தகம் பாதித்திருப்பதை ஒப்புக் கொள்கிறோம். ஆனால், குறிப்பிட்ட சில துறைகளுக்கு சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஜவுளி உள்பட பல்வேறு துறைகளில் ஜி.எஸ்.டி. குறைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டங்களால் கோவை மாவட்டம் அதிகம் பயனடைந்துள்ளது. மகிழ்ச்சியடைய வேண்டிய திட்டங்களை பெற கோவை மக்கள் மீண்டும் பா.ஜ.க.விற்கு வாக்களிக்க வேண்டும்.

தோல்வியின் பயத்தால் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நாள்தோறும் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அளித்து வருகிறார். காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி தோல்வியைத்தான் சந்திக்கும் என்பதை அவர்கள் அறிந்திருப்பதால், அவர்கள் எதை எதையோ கூறி வருகின்றனர். அவர்கள் கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதே இன்னும் முடிவாகவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள கேரள கம்யூனிஸ்ட் கட்சி, வேறு ஒருவரை பிரதமராக தேர்வு செய்ய விரும்புகிறது. இது எப்படி முடியும்..?, பா.ஜ.க.,வில் நிலையான பிரதமர் இருக்கிறார்.

பா.ஜ.க. மாவட்ட பொது செயலாளர் ரமேஷ் குமார், மாநில துணை செயலாளர் ஆறுமுக சந்திர மோகன் உள்ளிட்ட பலர் இந்த செய்தியாளர் சந்திப்பில் இருந்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...