கோவை, பொள்ளாச்சி தொகுதிகளுக்கு சுழற்சி முறை அடிப்படையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

கோவை : நாடாளுமன்ற தேர்தலுக்காக கோவை மற்றும் பொள்ளாச்சி தொகுதிகளுக்கு சுழற்சி முறை அடிப்படையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் 2-வது கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டது.


கோவை : நாடாளுமன்ற தேர்தலுக்காக கோவை மற்றும் பொள்ளாச்சி தொகுதிகளுக்கு சுழற்சி முறை அடிப்படையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் 2-வது கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று கோவை மாவட்ட நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் ரேணுஜெய்பால் (கோவை) சுபீர்குமார் (பொள்ளாச்சி), அனைத்து வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கு. இராசாமணி தலைமையில், நாடாளுமன்ற தேர்தல் 2019க்காக மாவட்டத்தில் உள்ள கோவை, பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் பயன்படுத்துவதற்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை பகிர்ந்தளிப்பதற்காக 2ம் கட்டமாக, இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தின் மூலம் சுழற்சி முறையினை பயன்படுத்தி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

பின்னர், மாவட்ட தேர்தல் அலுவலர் கு.இராசாமணி தெரிவித்ததாவது :- நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஏற்கனவே வரப்பெற்ற வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவினை சரிபார்க்கும் இயந்திரங்கள் அனைத்தும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிகள் முன்னிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தின் மூலம் சுழற்சி முறையில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து இன்று கோவை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர் கவுண்டம்பாளையம், சூலூர், பல்லடம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு அனைத்து வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் 2-ம் கட்டமாக, இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தின் மூலம் சுழற்சி முறையினை பயன்படுத்தி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அனுப்பி வைக்கப்பட உள்ளது, என்றார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...