ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்கள் 3,000 ஆண்டுகள் தொன்மையானது : நீதிமன்றத்தில் தொல்லியல் துறை தகவல்

மதுரை: ஆதிச்சநல்லூரில் கிடைத்த பழங்கால பொருட்கள் சுமார் 3,000 ஆண்டுகள் பழமையானவை என தொல்லியல் துறை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது


மதுரை: ஆதிச்சநல்லூரில் கிடைத்த பழங்கால பொருட்கள் சுமார் 3,000 ஆண்டுகள் பழமையானவை என தொல்லியல் துறை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது

தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் காமராஜ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநலன் மனுவை தாக்கல் செய்தார். அதில், ஆதிச்சநல்லூரை தொடர்ந்து ஆய்வுகளை போல பரம்பு உள்ளிட்ட சில பகுதிகளில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டும் என மனுவில் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன் மற்ற்ம் எஸ்.எஸ். சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆதிச்சநல்லூரில் ஆய்வு நடத்தி 16 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகும், ஆய்வு குறித்து அறிக்கை சமர்ப்பிக்காதது ஏன்..? என தொல்லியல் துறைக்கு கேள்வி எழுப்பினர். 

இந்த வழக்கில் விளக்கம் அளித்த தொல்லியல் துறை, ஆதிச்சநல்லூரில் கிடைத்த அகழ்வாய்வு மாதிரி பொருட்கள் கார்பன் சோதனைக்காக அமெரிக்கா ஃப்ளோரிடா மாகாணத்திற்கு அனுப்பப்பட்டது. அதன் மூலம் ஒரு பொருளின் காலகட்டம் கி.மு. 905 என்றும், மற்றொரு பொருளின் வயது கி.மு. 701 என்று கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறியது. 

மேலும், இந்த வழக்கில் விளக்கம் அளிக்க கூடுதல் கால அவகாசம் வேண்டும் என தொல்லியல் துறை நீதிபதிகளிடம் கோரிக்கை விடுத்தனர். அதை தொடர்ந்து பேசிய நீதிபதிகள், இந்தியாவின் பழமையான மொழி தமிழ் தான் என்று தெரிய வந்த பின்னும், கார்பன் சோதனை முடிவுகளை வைத்து ஆதிச்சநல்லூரில் அடுத்தக்கட்ட அகழ்வாய்வு பணிகளை தொடரப்போவது மத்திய அரசா..? அல்லது மாநில அரசா..? என்று கேள்வி எழுப்பினார்கள். 

இதுதொடர்பாக தொல்லியல் துறை விரைவில் பதிலளிக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், வழக்கினை ஏப்ரல் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...