தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கைது செய்யப்படுவார் : தொண்டாமுத்தூர் பிரச்சாரத்தின் போது ஸ்டாலின் பேச்சு

கோவை : தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், ஊழல் வழக்கில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கைது செய்யப்படுவார் என தொண்டாமுத்தூர் பிரச்சாரத்தின் போது தி.மு.க.தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


கோவை : தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், ஊழல் வழக்கில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கைது செய்யப்படுவார் என தொண்டாமுத்தூர் பிரச்சாரத்தின் போது தி.மு.க.தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பொள்ளாச்சி தி.மு.க. வேட்பாளர் சண்முக சுந்தரத்திற்கு ஆதரவாக தொண்டாமுத்தூரில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது :- அமைச்சர் வேலுமணியின் ஊழல்கள் குறித்த பல ஆதாரங்கள் கிடைத்து இருக்கின்றது. இப்போது அவற்றை வெளியிட்டால் நடவடிக்கை இருக்காது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் ஆதாரங்களை கொண்டு, வேலுமணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார். 

பொள்ளாச்சி விவகாரத்தில் தொடர்புடைய பார் நாகராஜன் என்பவர் துணிச்சலாக இருப்பதற்கு வேலுமணி கொடுக்கும் தைரியம்தான் காரணம். இதுவரை பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கவில்லை. அமைச்சர்களுக்கும், அ.தி.மு.க.வினருக்கு ஆதரவாகவும் சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தி வருகின்றது. தி.மு.க. ஆட்சி வந்தவுடன் சி.பி.ஐ. விசாரணை கண்டிப்பாக நடத்தப்படும், எனக் கூறினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...