கோவை : கோவையில் ஜி.எஸ்.டி. வரியால் 50 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டு, 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்திருப்பதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
கோவை : கோவையில் ஜி.எஸ்.டி. வரியால் 50 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டு, 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்திருப்பதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கோவை மக்களவை தொகுதி பிரச்சாரப் பொதுக்கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், பங்கேற்ற ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உரையாற்றியதாவது :- வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் ஜனநாயகமா..?, பாசிச வெறியாட்டமா..? என்ற கேள்விற்கு விடை காணும் தேர்தலாகும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்துத்துவா கூட்டம் என்ற எந்தவித வன்முறையும் செய்ததில்லை என்ற ஆபத்தான துருப்பு சீட்டை பிரதமர் மோடி வீசுகின்றார். இந்தியாவில் நடந்த வன்முறை செய்திகள் எதுவும் உங்கள் காதுகளை எட்டவில்லையா.. மோடி அவர்களே. ஓடாத திருவாரூர் தேரை 4 வீதிகளிலும் ஓட வைத்த பெருமைக்கு உரியவர் கலைஞர். தென்னிந்தியாவின் மான்செஸ்டர் மாநகரமான கோவையில் ஜி.எஸ்.டி. வரியால் 50 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டு, 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
கோவையில் இயங்கி வந்த மத்திய அரசின் அச்சகம், கரும்பு ஆராய்ச்சி மையத்தை மூடியது நயவஞ்சக மோடி அரசு. நரேந்திர மோடி, அமித்ஷா பெயரை சொன்னாலே நடுங்குகின்ற எடப்பாடி அரசால், இவர்களை எதிர்க்க முடியுமா..?. இந்தியாவில் வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. தமிழகத்திற்கு வரவேண்டிய பல்வேறு கம்பெனிகள் வேறு மாநிலங்களுக்கு சென்று விட்டது. போர்ட், ஹோண்டா பைக் நிறுவனம், பிரான்ஸ் நிறுவனத்தின் ரயில் பெட்டி தயாரிக்கும் நிறுவனம், கொரியாவின் நிறுவனம் என பல நிறுவனங்கள் கமிஷன் அதிகம் கேட்டதால், தொழில் துவங்க அவர்கள் தமிழகத்திற்கு வராமல் வேறு மாநிலத்திற்கு ஒடி விட்டார்கள். இதனால், ஏராளமான வேலைவாய்ப்பு பறிபோனது.
விவசாயம் மற்றும் கல்விக் கடன்களை ரத்து செய்ய முடியாது என சொல்கின்றனர். நீங்கள் யார் ரத்து செய்ய, நாங்கள் செய்கின்றோம் என்று அறிவித்தார் தி.மு.க. தலைவர் ஸ்டாலின். இந்த கருத்தை வழி மொழிந்தார் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தி.மு.க. தேர்தல் அறிக்கையை போலவே இருக்கின்றது. தி.மு.க போட்டியிடும் 18 தொகுதிகளிலும், 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தி.மு.க.வை வெற்றியடையச் செய்ய வேண்டும். என்றார்.