கோவை : கோவையில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த நபர் மீது கோவை மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
கோவை : கோவையில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த நபர் மீது கோவை மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
வெரைட்டி ஹால் ரோடு உப்பார வீதியில் வசித்து வரும் செல்வராஜின் மகன் பாலகிருஷ்ணன் என்ற பிரபு. இவர் அதே பகுதியில் வசித்து வரும் சரவணன் என்பவரை முன் விரோதம் காரணமாக கடந்த மாதம் 22-ம் தேதி கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதில், சரவணன் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த வழக்கில், வெரைட்டி ஹால் போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், தொடர்ந்து பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வரும் பிரபுவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டார். இந்த உத்தரவின் கீழ் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.