தொழிலையும், தொழிலாளர்களையும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியால் மட்டுமே காப்பாற்ற முடியும் : கோவை பொதுக்கூட்டத்தில் முத்தரசன் பேச்சு

கோவை : தொழில் நகரமான கோவையில் நலிந்து கிடக்கும் தொழிலையும், தொழிலாளர்களையும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியால் மட்டுமே காப்பாற்ற முடியும் என சி.பி.ஐ. மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.


கோவை : தொழில் நகரமான கோவையில் நலிந்து கிடக்கும் தொழிலையும், தொழிலாளர்களையும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியால் மட்டுமே காப்பாற்ற முடியும் என சி.பி.ஐ. மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார். 

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கோவை மக்களவை தொகுதி பிரச்சார பொதுக்கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், கலந்து கொண்டு சி.பி.ஐ. மாநில செயலாளர் முத்தரசன் பேசியதாவது :- கோவை தொழிலாளர்கள் நிறைந்த தொழில் நகரம். இன்றைக்கு தொழிலும், தொழிலாளர்களும் நசிந்த நிலையில் உள்ளனர். தொழிலையும், தொழிலாளர்களையும் காப்பாற்ற எங்கள் கூட்டணியால் தான் முடியும். கோவையில், அ.தி.மு.க. ஆட்சி தண்ணீர் வழங்குகிற பணியை மாநகராட்சியை கொண்டு மேற்கொள்ளாமல், பிரான்ஸ் நிறுவனத்திடம் விற்று விட்டது. இங்கு மட்டுமல்ல, அனைத்து நகராட்சி, மாநகராட்சிகளிலும் தண்ணீர் விலைபேசி விற்கப்படுகிறது. 

தண்ணீர் விநியோகத்தைப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு கொடுத்து, அதிலும் கோடிகளில் ஊழல் செய்யும் ஊழல் ஆட்சியை அகற்றவும், மதச்சார்பற்ற ஆட்சியை உருவாக்கவும், மோடியையும் பாடியையும் வீட்டுக்கு அனுப்பவும், இந்த தேர்தலில் மதசார்பற்ற கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும், எனக் கூறினார். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...