பெரும் முதலாளிகளின் காவலாளியாக இருக்கிறார் மோடி : சவுகிதார் குறித்து கோவை கூட்டத்தில் ஜவஹிருல்லா விமர்சனம்

கோவை : பெரு முதலாளிகள் மற்றும் பணம் படைத்தவர்களின் காவலாளியாக இருந்து வருவதால், பிரதமர் மோடி சமூக வலைதளங்களில் தன்னை சவுகிதார் என குறிப்பிட்டிருப்பதாக மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.


கோவை : பெரு முதலாளிகள் மற்றும் பணம் படைத்தவர்களின் காவலாளியாக இருந்து வருவதால், பிரதமர் மோடி சமூக வலைதளங்களில் தன்னை சவுகிதார் என குறிப்பிட்டிருப்பதாக மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். 

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கோவை மக்களவை தொகுதி பிரச்சாரப் பொதுக்கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், பங்கேற்ற மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பேசியதாவது :- 2014-ம் ஆண்டு முதல் மத்தியில் ஆட்சி செய்த மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பல்வேறு வாக்குறுதிகள் அளித்து உள்ளது. ஆனால், எதுவும் நிறைவேற்றப்படவில்லை. ஒரே ஒரு உண்மையை மட்டும் சொல்லி உள்ளனர். நான் சவுகிதார் (மக்களின் காவலன்) என பிரதமர் மோடி டிவிட்டர், முகநூல் என போன்றவற்றில் பதிவிட்டார். இதனைத் தொடர்ந்து, பா.ஜ.க.வினர் நாங்களும் சவுகிதார் என கூறி வருகின்றனர். இவர்கள் பெரு முதலாளிகள் மற்றும் பணம் படைத்தவர்களின் காவலாளியாக இருந்து வருகின்றனர். 

கடந்த ஐந்து ஆண்டுகளில் 48 முறை வெளிநாட்டிற்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இந்தப் பயணங்கள் ஏழை தொழிலாளி மக்களின் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளப்பட்ட பயணங்களா..?. இந்தப் பயணங்களின் போது பெரும் முதலாளிகளான அனில் அம்பானி, அதானி ஆகியோரை அழைத்து சென்று உள்ளார். பிரதமர் மோடி சாமானியனுக்குக் காவலாளி அல்ல. 

ஒரு காலத்தில் கோவை மாவட்டம் சிறு, குறுந்தொழில்களின் முன்னோடி மிகுந்த மாவட்டமாக இருந்தது. ஆனால், தற்போது ஜி.எஸ்.டி. காரணமாக பெரும் பாதிப்பு எற்பட்டு தொழில்கள் நலிவடைந்து விட்டது. வர்த்தக நிறுவனங்களின் பிராண்ட் அம்பாசிடராக பிரதமர் மோடி மாறிவிட்டார். தற்போது, மோடி அரசு தேர்தல் ஆணையத்துடன் கூட்டணி வைத்து உள்ளது. கண்டெய்னரில் கைப்பற்றப்பட்ட பணம் எங்கே..?. வரும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி வெற்றி பெற்று ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார், என்றார்.



இதைத் தொடர்ந்து, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக காங்கிரசின் துணைத் தலைவருமான கந்தசாமி பேசுகையில், "நேற்று வெளியிடப்பட்ட காங்கிரஸின் தேர்தல் அறிக்கையிலும், தி.மு.க.வின் அறிக்கையிலும் பல ஒருமித்த கருத்துகள் உள்ளன. குறிப்பாக, நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என இரண்டு அறிக்கையிலும் கூறப்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்களின் குழந்தைகளுக்கு நிகழ்த்தப்பட்ட மிகப்பெரும் கொடுமை நீட் தேர்வு. அதுமட்டுமல்ல, மாணவர்களுக்குக் கல்வி கடன் வழங்கப்படும். கோவையின் தொழிற்சாலைகள் மீண்டும் திறக்கப்படும். விவசாயம், நெசவு, தொழிற்சாலைகள் என அனைத்தும் கோவையில் முடங்கியுள்ளது. இவற்றை மீட்டெடுக்கவும், அ.தி.மு.க.,வின் ஊழல் மணிகளை ஆட்சியில் இருந்து அகற்றவும், தி.மு.க கூட்டணிக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும்," எனக் கூறினார். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...