கோவையில் சிறுமியின் குடும்பத்திற்கு சி.பி.எம். வேட்பாளர் உள்பட மார்க்சிஸ்ட் பிரமுகர்கள் ஆறுதல்

கோவை : கோவையில் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுமியின் குடும்பத்தினரை கோவை சி.பி.எம். வேட்பாளர் பி.ஆர். நடராஜன் உள்பட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரமுகர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.


கோவை : கோவையில் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுமியின் குடும்பத்தினரை கோவை சி.பி.எம். வேட்பாளர் பி.ஆர். நடராஜன் உள்பட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரமுகர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். 

கோவை பன்னிமடையில் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்த கொலை செய்யப்பட்ட நிலையில், சிறுமியின் பெற்றோர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் மற்றும் கோவை நாடாளுமன்ற வேட்பாளர் பி.ஆர். நடராஜன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

பின்னர் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- சிறுமியை கொடூரமாக கொன்று இருப்பது தமிழகத்தையே உலுக்கி உள்ளது. கோவையில் கடந்த 6 மாதமாக குழந்தைகள், பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகம், அரசு அதிகாரிகள் வேடிக்கை பார்த்து வருகின்றனர். அதேபோல, போதை பொருட்களின் விற்பனை அதிகமாக இருந்து வருகிறது. இதற்கு இளைஞர்கள் அடிமையாகி வருகின்றனர். காவல்துறை இவர்களுக்கு கைப்பாவையாக மாறி உள்ளது. காவல்துறையின் அலட்சியத்தால்தான் இந்த சம்பவம் நடைபெறுகிறது.

சிறுமியின் வழக்கில் கைது செய்யப்பட்ட நபரின் பாட்டியும் சம்பவம் நடந்த அன்று உயிரிழந்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஆகவே, பாட்டியின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும். ஒருவரை மட்டுமே கைது செய்து மற்றவர்களைக் காப்பாற்ற காவல்துறை முயல்கிறதோ என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களையும் கைது செய்ய வேண்டும். இவர்களுக்கு மூன்று மாதங்களுக்குள் தண்டனை வழங்க வேண்டும்.

 

பன்னிமடை பகுதியில் ஆதிதிராவிட மக்களுக்கு அடிப்படை தேவைகள் கூட இல்லாமல் உள்ளனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சிறுமியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். அரசாங்கம் சிறுமியின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும். அவருடைய சகோதரியின் கல்விக்கு உதவ வேண்டும். மதவெறி அமைப்புகள் தான் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். அதேபோல, வேண்டுமென்றே திசை திருப்பும் வகையில், சிறுமியின் வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ளதாகப் பரப்புகின்றனர். இந்த செய்தியை வெளியிட்ட பத்திரிக்கை மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம், எனக் கூறினார். 

.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...