நீலகிரி : நீலகிரியில் தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையில் கைப்பற்றப்பட்ட தொகையில், உரிய ஆவணங்களை சமர்ப்பித்ததால், ரூ. 1.76 கோடி திரும்ப ஒப்படைக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான இன்சென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

தேர்தல் நன்னடத்தை விதிமுறை அமலில் உள்ளதால், தேர்தல் பறக்கும் படையினர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தேர்தல் பணிக்காக 163 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. உதகை, குன்னூர் மற்றும் கூடலூர் ஆகிய மூன்று தொகுதிகளில் 18 பறக்கும் படையும், 18 நிலையான கண்காணிப்புக் குழுவும் மற்றும் 10 வீடியோ கண்காணிப்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுக்கள், மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகள் உட்பட பல பகுதிகளில் ஆய்வு நடத்தி வருகின்றனர். தேர்தல் நன்னடத்தை விதிகள் அமல்படுத்திய நாளிலிருந்து நேற்றைய நிலவரப்படி, உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 2.86 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. பின், ஆவணங்கள் சமர்ப்பித்தவர்களுக்கு ரூ. 1.76 கோடி ரூபாய் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் வாகன சோதனையை அதிகாரிகள் பலப்படுத்தியுள்ளனர். இதுவரை நடந்த வாகன சோதனையில் அரசியல் கட்சிகளில் பணம் ஏதும் சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது