கோவை : நீலகிரி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து தகவல் தொழில்நுட்ப துறை சார்பில் சட்டப்பேரவை சபாநாயகரின் மகன் லோகேஷ் தமிழ்செல்வன் அன்னூர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கோவை : நீலகிரி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து தகவல் தொழில்நுட்ப துறை சார்பில் சட்டப்பேரவை சபாநாயகரின் மகன் லோகேஷ் தமிழ்செல்வன் அன்னூர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த அன்னூர் நகர பகுதியில் அ.தி.மு.க., சார்பில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு போட்டியிடும் வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து சபாநாயகர் மகனும், அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில துணை செயலாளருமான லோகேஷ் தமிழ்ச்செல்வன் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
அன்னூர் பேருந்து நிலையம், வணிக வளாகங்களுக்கு கட்சி தொண்டர்களுடன் சென்ற அவர் அ.தி.மு.க.,வின் சாதனை திட்டங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி, அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்டி வாக்கு சேகரித்தார். இதில், அன்னூர் ஒன்றிய செயலாளர் அம்மாள் பழனிச்சாமி, துணை செயலாளர் சாய் செந்தில் உட்பட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.