கோவை : மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகையில் விவசாய தோட்டத்திற்கு போடப்பட்டுள்ள மின்சார வேலியின் மின்சாரம் தாக்கிய சம்பவத்தில் காட்டு யானை உயிரிழந்தது.
கோவை : மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகையில் விவசாய தோட்டத்திற்கு போடப்பட்டுள்ள மின்சார வேலியின் மின்சாரம் தாக்கிய சம்பவத்தில் காட்டு யானை உயிரிழந்தது.

சிறுமுகையில் பவானி ஆற்றங்கரை அருகே தனியாருக்குச் சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் வனவிலங்குகள் நுழைவதை தடுப்பதற்காக மின்சார வேலி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்றிரவு 10 முதல் 12 வயது மதிக்கத்தக்கக் காட்டு யானை ஒன்று விவசாய நிலத்தில் நுழைய முயற்சி செய்துள்ளது. அப்போது, மின்சார வேலியின் மின்சாரம் தாக்கியதில் காட்டு யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

இது குறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர், விவசாய நிலத்திற்கு சொந்தக்காரரான விவசாயி நாசர் அலியை உடனடியாக கைது செய்தனர். தொடர்ந்து, நடத்தப்பட்ட விசாரணையில், சோலார் சக்தி பேட்டரியில் மின்சார வேலிக்கு நேரடியாக மின் இணைப்பு கொடுத்திருந்தது தெரிய வந்தது. பின்னர், தொண்டு நிறுவனங்களின் முன்னிலையில், உயிரிழந்த காட்டு யானையின் உடலுக்கு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.