நீலகிரி : நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கரிய மலைப்பகுதியில் ஒற்றை காட்டு யானை சுற்றித்திரிவதால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நீலகிரி : நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கரிய மலைப்பகுதியில் ஒற்றை காட்டு யானை சுற்றித்திரிவதால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
மஞ்சூர் அருகே உள்ள கரிய மலைப் பகுதியில் தேயிலை எஸ்டேட்டுகள் அதிகம் உள்ளன. இப்பகுதியில் இன்று திடீரென நுழைந்த ஒற்றை காட்டு யானை அப்பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் சில மணி நேரம் தங்கியது. இதன் காரணமாக, தேயிலை தோட்டத்திற்கு வேலைக்கு செல்லாமல் தொழிலாளர்கள் வீடுகளில் காத்திருந்தனர். சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, இந்த காட்டு யானை அங்கிருந்து மஞ்சூர் முக்கியச் சாலை வழியாக, அருகில் உள்ள தோட்டத்திற்குள் சென்றது.

இந்த ஒற்றை காட்டு யானை நடமாட்டம் குறித்து வனத்துறைக்கு இப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த யானையை உடனடியாக அடர்ந்த வனப்பகுதிக்குள் துரத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.